கடலுக்கு.. செங்கொடியின்.. அணையா - வித்யாசாகர்

Photo by Shyam on Unsplash

கடலுக்கு அப்பால் பூக்கும், அந்த வெள்ளைமலர்கள்.. செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது அஹிம்சையின் பெருநெருப்பு .. அணையா உயிர்விளக்கை ஒளிர்க்கும் மனித(ம்) பலம்!!!
01.!
கடலுக்கு அப்பால் பூக்கும்; அந்த வெள்ளைமலர்கள்!
------------------------------------------------------!
கண்ணிரண்டை விற்றுவிட்டு!
கண்ணாடியை வாங்குறோம்,!
விளக்கை அணைத்துவிட்டு!
வெளிச்சத்தை தேடுறோம்;!
நாலும் தெரிந்தவர்கள்!
தனியாளா நிக்கிறோம்,!
சொந்தபந்தம் இல்லாம!
செத்த பிணமா அலையுறோம்;!
நல்ல நாலு ஏதுமில்லை!
நிகழ்ச்சின்னு ஒண்ணுமில்லை!
கல்யாண நாளைக் கூட!
தொலைபேசியில் தீர்க்கிறோம்;!
இயக்கிவிட்ட எந்திரமா!
இரவு பகல் உழைக்கையில!
வியர்வையில் சரித்திரத்தை!
காய காய எழுதுறோம்;!
காற்று போல மண்ணு போல!
மனசெல்லாம் ஆசை ஆசை,!
ஆசைப் பட்ட அத்தனையையும்!
அற்ப பணத்துக்கே விற்கிறோம்;!
பணமென்னும் காகிதம் தான்!
விதியை கூட மாத்துதே,!
வீடுமனை பல இருந்தும்!
மனசு ஒத்தையாவே வாடுதே;!
சின்ன சின்ன கனவுகளும்!
சேர்த்துவைத்த நினைவுகளும்!
மனதில் மரணமாவே கனக்குமோ!
பெரும் தீயாக எரிக்குமோ;!
கல்லறையில் கூட நாளை!
வெறும் புல்லாக முளைக்குமோ?!
காற்றாட நகர்ந்து நகர்ந்து - நாம்!
வாழாததை பேசுமோ...(?)!
காட்டாற்று வெள்ளத்தில்!
கரையும் புள்ளியாய் போகுமோ,!
காலத்தின் நகர்தலில் -!
எங்களின் நிறத்தை வெள்ளையாகவே தீட்டுமோ!!!!!
!
02.!
செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது அஹிம்சையின் பெருநெருப்பு !
----------------------------------------------------------------!
உள்ளெரிந்த நெருப்பில்!
ஒரு துளி போர்த்தி வெந்தவளே,!
உனை நெருப்பாக்கி சுடப் போயி!
எம் மனசெல்லாம் எரிச்சியேடி..!
மூணு உயிர் காக்க உடம்பெல்லாம்!
தீ மையிட்டுக் கொண்டவளே,!
தீ'மையில் உன் விதியெழுதி - எம்!
பொய்முகத்தை உடச்சியேடி..!
விடுதலை விடுதலைன்னு!
வெப்பம்தெறிக்க கத்துனியா?!
அதை கேட்காத காதெல்லாம்!
இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி..!
செத்தா சுடுகாடு, சும்மா இருந்தா!
நீதி ஏதுன்னு; ஒரக்கக் கத்திப் போனவளே,!
நீ நெருப்போட புரண்டபோதே!
தமிழன் வரலாறே கருகுச்சேடி...!
பாரதத் தாய் அஹிம்சை நெருப்பில்!
உன் உயிர்பட்டுத் துடிதுடிக்க -!
உன் ஒருத்தி மரணம் போதும் போதும்!
உலக கண்ணெல்லாம் ரத்தமேடி..!
இப்படி கெட்ட பேரு வாங்கிவர!
மரணம் தான் சொல்லுச்சாடி ?!
இந்த சின்னவயசு கனவுகளை!
வரலாற்றில் எரிச்சியேடி..!
இனி கத்தியழ யாரிருக்கா !
இப்படி ஒன்னொன்னா போச்சுதுன்னா?!
நாளை குரல்கொடுக்க யாரிருக்கா!
நீயெல்லாம் எரிந்துப்போனா?!
உன்னொருத்தியோட நிருத்திக்கடி!
வேண்டாமே இனி ஓரிழப்பு!
போராட்ட குணத்திற்கு -!
தற்கொலைதான் பேரிழப்பு;!
நீ விட்ட உயிரு மீட்டிடாத!
கண்ணீர் - மனசின் பெருநெருப்பில் பொசுங்குதேடி!
இனி மொத்த நாடும் சேருமோ இல்லையோ!
சேரா தமிழ் ஒற்றுமைக்கு செங்கொடியே காவலடி!!!
!
03.!
அணையா உயிர்விளக்கை ஒளிர்க்கும் மனித(ம்) பலம்!!!
-------------------------------------------------------------!
திறக்காத கதவின்!
மனத் தோன்றல்களாகவே!
சப்தமிழந்துக் கிடக்கின்றன நம் முயற்சியும்!
லட்சியங்களும் நம்பிக்கையும்..!
வீழும் மனிதர்களின்!
ஏழ்மை குறித்தோ அவர்களின்!
பசி பற்றியோ!
பிறர் நலமெண்ணி வாழாமையோ மட்டுமே!
வீழ்த்துகிறது - நம்!
சமூகம் தழைக்கச் செய்யும் மனிதத்தை;!
தெருவில் கிடப்பவர்!
யாரென்றாலும் விடுத்து!
அவர் மனிதர் என்பதை மட்டுமேனும்!
கருத்தில் கொண்டு அக்கறை வளர்த்தல்!
நாம் இழக்கும் ஓர் -!
உயர் உணர்வாகி வருகிறதே தவறில்லையா?!
ஓடுடைத்து உலகைப்பார்க்கும்!
பறவையின் உயரம் தாண்டியே!
காத்துக்கிடக்கிறது நமக்கான வெற்றிகளும்!
வாழ்வின் வசந்தமும் என்பதை!
இளைய சமதாயம் -!
முற்றிலும் உணர்வதென்பது நம்!
எதிர்காலக் கனவுகளின் பலமில்லையா??!
சொடுக்கி முடிக்கும் அத்தனை!
சாதனைகளையும்!
சூழ்ச்சுமமுடைத்து!
விரல்நுனியில் நிறுத்தும்!
கொம்பன்களின் துணிவுக்கு!
வாய்ப்பென்னும் வாசல் திறக்க!
முயற்சியென்னும் சாவிகளெல்லாம் அதோ!
வானில் குவிந்த நட்சத்திரங்களாய்!
கைக்கெட்டியே கிடப்பதை அகல விரிந்த கண்களே!
பார்த்தும் முயற்சித்தும் வென்றும் விடுகின்றன' என்பதை!
ஏன் நீயும் நானும் -!
சரிசமமாய் உணர்வதில்லை???!
வெளியில் காட்டாத திறன்!
இறுகி இராத மனோதிடம்!
எடுத்தாய்ந்துக்கொள்ள இயலாத் தெளிவு!
இயல்பாய் இருந்திடாத உண்மை நிலை!
எடுத்தாண்டிடா முயற்சி!
இரும்பெனக் கொள்ளாத நம்பிக்கை!
இருப்பதில் நகர்ந்து வெல்லும் உத்தி!
அல்லது உறுதியென நீளும் -!
பொத்தான்களில்லாத சட்டைதான் நம்மை!
உலகின் பார்வையில் வெற்றியணியா நிர்வாண!
மனிதர்களெனக் காட்டிவிடுகிறது..,!
உயிரணையும் கடைசி தருணத்தில்!
காற்றுமறைத்த கைகளென நம்பி!
அந்த ஒவ்வொரு பொத்தான்களையும்!
வாழ்வென்னும்!
சட்டைக்கென!
நம்பிக்கையோடு கட்டிவருவோம்;!
மெல்ல மெல்ல நகர்ந்து நாளை!
உச்சி ஏறி நிற்கையில்!
வெற்றியோ அல்லது!
அதை போதிப்பதற்கான அனுபவ அறிவோ!
நம் உயிர்பையில் நிறைந்து!
பெயருக்குப் பின் விழுந்துக் கிடக்கையில்!
கண்ணடைக்குமந்த!
கடைசிநாளில் -!
வெளிச்சமான உலகில் கலக்கும்!
அணையா ஜோதியாய்!
சுடர்விட்டு எரியட்டும் நம் உயிர்விளக்கு,!
விளக்குகளின் ஒளிவெண்மையில்!
ஜொளிக்கட்டும் இப்போதைய கருத்த மனிதம்
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.