சொன்னால் புரியும் மனங்களும்!
தன்னாலும் புரியாத மண்டூகங்களும்,!
மென்மையான மனங்களோடும் பலர்!
வன்மையான மனங்களோடும் சிலர். !
களிமண்ணாக சில மூளைகளும்!
காயகல்பமாக சில மூளைகளும்!
பளிங்கு போன்ற சிந்தனைகளோடும்!
கலங்கிய சிந்தனைகளோடும் சிலர். !
உலக உயர் நிலையில் சிலரும்!
அதள பாதாளத்தில் சிலரும்,
மனிதநேயம் காக்கும் சிலரும்!
மனிதநேயம் மிதிக்கும் பலரும்!
நல்லது-தீயது, சிறியது-பெரிதுமாய்!
வட்டம்-சதுரம், வளைந்து-நீள்கோடாய்!
மொத்தமாய் இவ்வுலக வாழ்வில்!
எத்தனை வேறுபாடுகள் மனிதரில்! !
ஐந்து வேறுபாடான விரல்கள்!
ஐக்கியமாகி இணைந்த கரங்களாவதாய்!
இணைந்து வேற்றுமைகளிலும் வாழ்வது!
பிணைந்த எம்முள்ளெழும் சாமர்த்தியமே! !
வேதா. இலங்காதிலகம்