பட்டுக்கோட்டை தமிழ்மதி !
நீ !
பூச்செடியைப் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
பூத்திருந்தது பூ. !
நீ !
வாசலைப் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
படர்ந்திருந்தது கோலம். !
நீ !
வானத்தைப் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
சிவந்திருந்தது அந்தி. !
நீ !
கொடியைப் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
காய்ந்திருந்தது கைகுட்டை. !
நீ !
சாளரம் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
நின்றிருந்தது நேற்றைய ஞாபகம். !
நீ !
மரத்தைப் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
கிளையிலிருந்தது கூடு. !
நீ !
என்னைப் பார்த்தாய் !
நானும் பார்த்தேன் !
மண்ணிலிருந்தது உன் கண். !
அப்போதும் !
உன் கண்ணிலிருந்தேன் நான்
பட்டுக்கோட்டை தமிழ்மதி