மெல்ல மெல்லச் சுற்றுகிறேன்!
மேசை மீது உலக உருண்டை.!
என்!
துணைக் கண்டம் தொட்டுச் சிலிர்க்கிறேன்.!
கடலில் நனைந்து கைவிரல்...!
ஈரத்தோடு தொடுகிறது ஈழத்தை.!
நான்!
கால் வைத்த மண்!
கண்ணுக்குத் தெரியாத புள்ளியாய்...!
சிங்கைச் சிறுதீவாய்...!
என் கையில் இந்த பூமி.!
o!
ஊருக்குப் போன தோழன்!
வாங்கி வந்த!
உருண்டைப் பூமியின் அடியில் அதன் விலை!
ஆ எனும் மறை குறியில்.!
இந்தப் பூமியை!
அச்சில் பொறுத்திய அச்சின் சாய்வு!
இருபத்து மூன்றரை பாகையில்!
இருக்கும்தானா?!
இதைச்!
செய்தவனுக்கு விளங்கியிருக்குமா!
இந்தச்!
சாய்வின் சங்கதி.!
கவையில் இப்படி மாட்டியது!
கண்ணில்பட வசதிக்குத்தான் என்பானா?!
மண்ணின்!
மேற்பரப்பு மேடுபள்ளம் போல!
இந்த உருண்டையில்!
ஒழுங்குக் கொஞ்சம் குறைந்து.!
அச்சு!
நேர்க்கோட்டில் இல்லாததால்!
துள்ளிக் குதிக்கிறது.!
சுற்றுகையில்!
நிலம் நடுங்குவது போல!
உறுதிப் போதா!
இந்தக்!
கம்பிக் கவைப் பிடிமானத்தால்.!
ஆனாலிந்த நிசப் பூமி!
எந்தப் பிடிமானமும் இல்லாமல்!
இந்தப் பேரண்டத்தில் இயங்குகிறது.!
இன்னொன்றில் பயணிக்கும் எதற்கும்தான்!
பிடிமானம் வேண்டும்.!
இந்தப் பூமிக்கு எதற்கு?!
இல்லை!
இருக்குமோ பிடிமானம்...?!
சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன்!
எல்லா தேசங்களையும்!
இருந்த இடத்தில் இருக்க!
இந்தப் பூமி உருண்டை.!
பல்லைப் பிடித்துப் பார்க்கிறேன்.!
பாசமாய்!
ஊரிலிருந்து ஓட்டி வந்த!
ஓர் உழவு மாடாய்!
இந்த உலக உருண்டையை.!
இந்த!
உருண்டைப் பூமியில்!
ஒரு குழி மண்ணாவது வாங்கலாம்தான்.!
ஆனால்!
மண்ணுக்கென தருவது பெறுவது!
மண்ணின் விலையாகுமா?!
கொடுப்பதும் கொள்வதுமாயிருக்கும்!
மண்ணுக்கு!
மனிதனென்ன விலை வைப்பது?!
உள்ளன்பில் கொடுத்த இந்த!
உலக உருண்டைப் பரிசுக்கும்தான்?!
விலையில்லா இந்த உலக உருண்டையில்!
ஈழத்தைத் தொட்டு எழுதுவேன்!
இது!
தமிழனின் மண் !
என்று
பட்டுக்கோட்டை தமிழ்மதி