இரும்பும் பித்தளையும் !
அருகருகே இருந்தால் !
அரித்தல் போன்ற !
வேதிமாற்றம் நிகழுமாம். !
பஞ்சும் நெருப்பும் !
பக்கம் பக்க மிருந்தால் !
பற்றிக்கொள்ளுமாம். !
காந்த !
எதிர் எதிர் துருவங்கள் !
கிட்ட கிட்ட யிருந்தால் !
ஒட்டிக்கொள்ள !
இழுத்துக்கொள்ளுமாம். !
வா... !
அவை போல !
இருந்துப் பார்ப்போம் !
என்னாகிறது என்று பார்ப்போம் !
என்றேன். !
என்றாலும் !
ஒருநாள்தான் புரிந்தது. !
நாம் விலகி !
தூரத்திலிருந்தாலும் !
அருகருகே யிருந்த !
அவைகளைவிட !
அதிக சீக்கிரமாகவே !
இணைவதை எண்ணித்தான் !
இருந்திருக்கிறோம் என்பது !
ஒரு நாள்தான் புரிந்தது. !
!
- பட்டுக்கோட்டை தமிழ்மதி !
(சிங்கப்பூர்)
பட்டுக்கோட்டை தமிழ்மதி