எரிந்த விளக்கு!
எரிந்து போயிருக்கும்.!
குடிக்க வைத்திருந்த தண்ணீரை!
குடத்தை உடைத்து குடித்திருக்கும்!
குண்டுகள் .!
உங்கள்!
அங்கம் கிழிந்திருக்கிறது!
ஆடையாய்.!
தாலியின் தங்கமென்ன!
உங்கள் அங்கமும் உருகி!
ஈழமாய்தான் உருபெறும்.!
வீடிழந்து!
விளையும் காடிழந்து!
பிழைக்க அல்ல!
பிணங்களாய்தான்!
இடுகாடு நோக்கியா!
இடம்பெயர்ந்தீர்கள்?!
எந்தக் காலத்தில்!
இறந்திருக்கிறீர்கள் நீங்கள்?!
மண்ணுக்குளிருந்து எடுத்த!
மம்மிகளா நீங்கள்?!
பிரமேடுகளுக்குள்!
பெறப்பட்ட உடல்களா உங்களது?!
அப்படிதான் கிடக்கிறீர்கள்!
அடிப்பட்டு.!
ஆயிரமாயிர ஆண்டுகளுக்கும்!
அழியாத சாட்சிகள் நீங்கள்.!
குண்டு விழுந்த!
குடிசையின் சாம்பலில்!
ஒருமுகமாக!
ஒன்றாய் குவிக்கப்பட்ட!
முகங்கள்...!
பற்கள் தெரிய நீங்கள்!
சொல்லத்துடிக்கும்!
சொற்கள்தான் என்ன?!
எங்களுக்கு வேண்டும்!
எங்களுக்கு வேண்டும்!
எங்கள் தமிழீழம்!
எங்களுக்கு வேண்டும்!
என்பதுதானா?!
இன்னும் பேசும்!
எரிந்த உங்களின்!
மெளனம்.!
!
-பட்டுக்கோட்டை தமிழ்மதி !
------------------------------------------!
/சனவரி 31ம் தேதி இலங்கை அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில்!
மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள்!
தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள் _ சங்கதி!
இணையதளம்/
பட்டுக்கோட்டை தமிழ்மதி