ஊரிலிருந்து வந்திருக்கிறாய்?!
உன்னைப்!
பார்பதற்குள் பரவசம் எனக்கு.!
எனக்கு!
என்ன சேதியை!
கொண்டு வந்திருக்கிறாய்?!
நீ!
புறப்படுவது தெரிந்து!
பூ கொஞ்சம்!
வாசம் கொடுத்து அனுப்பியிருக்கலாம்.!
நான்!
நடந்த வரப்பு!
நலம்கேட்டு விட்டிருக்கலாம்.!
அறுவடைக்கா அடுத்த நடவுக்கா!
வயலென்!
வருகை கேட்டிருக்கலாம்.!
மறந்தேனென்று!
காற்று என்னை!
தூற்றி விட்டிருக்கலாம்.!
தொட நான் வருவதெப்போ என!
தொட்டால்சினுங்கி!
சொல்ல நினைத்து!
சொல்லாமலிருந்திருக்கலாம்.!
நான் நின்றமரம்!
என்நிழல் தன்னிழலுக்குள்ளிப்பவும்!
ஒளிந்துக் கொண்டிருப்பதாய்!
உன்னிடம் சொல்லிவிட்டிருக்கலாம்.!
காற்றாக நாற்றாக!
வரப்பாக வயலாக!
எல்லாம் நினைப்பாக...!
அன்பானவனே...!
நானிருக்குமிடம் நீவருவது தெரிந்தும்!
அவளேதும் சொல்லிவிட்டிருக்கமாட்டாள்!
உன்னிடம்!
அவளை நானும் விசாரிக்கமாட்டேன்.!
ஆனாலும் ...!
ஆவலோடு சந்திக்கிறேன்!
அவள் பொருட்டு
பட்டுக்கோட்டை தமிழ்மதி