சாத்தானின் கொடிய கரங்களில்!
பூந்தளிர்கள் அகப்பட்டன!
மனிதமற்ற மிருகத்தின் செய்கைகள்!
மிகக் கொடியதாக இருந்தன!
இன்னும் மலராத மொட்டுக்களை!
காமுகர்கள் கசக்கி எறிந்தனர்!
பால்யம் மாறாத முகங்களில்!
பீதி குடிகொண்டது!
கள்ளங் கபடமற்ற!
வெள்ளை உள்ளத்தில்!
உதிரத்தின் ரேகைகள் பதிந்தன!
வேட்டையாடுதலைப் போலே!
மனித உருவில் விலங்குக் கூட்டம்!
விரும்பியே செய்யும் காரியமிது!
பிள்ளைப் பிராயத்தில்!
சித்ரவதை அனுபவிக்கும் வேதனை!
அக்குழந்தையின் பால்யத்தை!
பறித்துவிடும்!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்!
நிகழ்வின் சுவடு மட்டும்!
வடுவாக மனதில் தங்கிவிடும்!
குற்றவுணர்ச்சி சிறிதுமற்ற!
ஈனப்பிறவியின் செய்கைகள்!
சமுதாயத்தை முற்றிலுமாய்!
சீரழித்துவிடும்!
இனி என்றென்றும்!
விழிப்போடு இருப்போம்!
அவர்களுக்கு அன்றன்றே!
தண்டணையைக் கொடுப்போம். !
(பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளுக்காக)

ப.மதியழகன்