உனது புகைப்படத்தைக் காண்பித்து!
பிடித்திருக்கிறதா என்றார்கள்!
உனது குடும்பத்தைக் காண்பித்து!
ஒத்துவருமா என்றார்கள்!
உனது மெலிந்த சரீரத்தைக் காண்பித்து!
பரவாயில்லையே என்றார்கள்!
உனது அழகை காண்பித்து!
கொடுத்து வைத்தவன் என்றார்கள்!
உனது பணிவைக் காண்பித்து!
புரிஞ்சுநடந்துக்க என்றார்கள்!
உனது வீட்டின் சீர்வரிசையை காண்பித்து!
போதுமா என்றார்கள்!
இவ்வளவு கேள்விகள்!
என்னைக் கேட்டார்களே!
என்னைப் பிடித்திருக்கிறதா என்று!
உன்னை கேட்டார்களா
ப.மதியழகன்