உச்சி முதல்!
உள்ளங்கால் வரை!
எங்கே குடியிருக்கிறது!
இந்த உயிர்!
கூட்டிலுள்ள பறவையினைப் போல்!
சிட்டெனப் பறந்து விடுகிறதே!
இந்த உயிர்!
சாமானியனுக்கும்!
சக்கரவர்த்திக்கும்!
சமமாய் ஆகிப்போனது!
இந்த உயிர்!
கூட்டை விட்டு!
இந்த உயிர்!
ஓடவில்லையென்றால்!
துயரச் சுமை தாங்காமல்!
மரணத்தை யாசகமாய்!
கையேந்தி கேட்கும்!
இந்த உடல்!
உயிர் பயத்தினாலே தான்!
சிறிதனவேனும் அறம்!
நிலைத்திருக்கிறது!
இந்த பூவுலகில்!
மயானத்தில் தாண்டவமாடும்!
ஆடல்வல்லானை பார்த்ததும்!
புரிந்து போகும்!
யாவர்க்கும் பொதுவாம் நீதியென்று!
வியாதியாலே சாக்காடு!
செல்லும் பாதையெங்கும் பூக்காடு!
இடுகாட்டில் தீக்காடு!
இது தான் சைவ நீதி என்று!
விளங்காமல் விளங்கிப்போகும். !
காண்பனவெல்லாம் மாயை !
விழுகின்ற மழைத்துளிகளனைத்தும்!
முத்துக்களாவதில்லை!
பெற்ற பிள்ளைகளனைத்தும்!
மச்சு வீடு கட்டுவதில்லை!
ஒன்றிரண்டு குறைகளில்லாதவர்!
வாழ்க்கையில் எவருமில்லை!
எல்லோரும் சந்நியாசம் கோலம் பூண்டு!
திருவண்ணாமலையில் பண்டாரமாய்!
அலைவதில்லை!
திருவோடு கூட சுமையென்று!
எண்ணுபவர் ஊரில் ஆங்காங்கே!
திரியத்தான் செய்கிறார்கள்!
கொண்டைச் சேவலுக்கு கர்வம்!
கோழி கூவி பொழுதுகள் விடிவதில்லை என!
ஆண்மகவு என்றாலும்,!
பெண்மகவு என்றாலும்!
பெற்றோருக்கு எல்லாமே!
ஒரே உதிரம் தான்!
மறுபடியும் மறுபடியும்!
அலையாய் எழுந்து!
கரையோடு முயங்குவது!
கடலுக்கு சலிப்பதில்லை!
அணை கட்டி தடுத்தாலும்!
நதியின் பயணம் கடல் நோக்கியே!
ஸ்படிகம் போன்றதாயினும்!
விழும் இடத்தைப் பொறுத்தே!
மழைக்கு முகவரி!
நேற்றிருந்தவன் இன்றில்லை!
என அறிந்தும்!
மார்தட்டி நிற்பவனை!
மண்மகள் பார்த்துச் சிரிக்கின்றாள்!
நகைப்புக்கு என்ன பொருள்!
மற்றவர்கள் காலில் மிதிபடும்!
மண்ணாக!
ஒரு நாள் என்னோடு கலப்பாய் என்றா?
ப.மதியழகன்