விழியிரண்டால்
மாயம் செய்தாய்
இதய அறையில்
நீயாய் நுழைந்தாய்
களங்கமில்லாச் சந்திரனே
பூமிக்கு எதற்கு
வருகை தந்தாய்
நகம் வளர்ந்தால்
வெட்டிவிடலாம்
உனது ஞாபகங்களை
என்ன செய்வது
உனது கண்ணொளியிலிருந்து
கடன் வாங்கித்தானோ
கதிரவன் பிரகாசிக்கிறான்
வானம் போல தூரச் செல்கிறாய்
மனக்குளத்தில் ஏன் கற்களை
எறிகிறாய்
தாயைப் போல
கேசம் வருடுகிறாய்
என்ன வரத்தை
தெய்வத்திடம் கேட்கிறாய்
அலைகடலில் கால்
நனைக்கிறாய்
தோள் மீது
சாய்ந்து கொள்கிறாய்
காற்றில் தவழந்து வரும்
இசை மழையில்
மெய் தீண்டத் தீண்டத் தானே
நாணம் வெட்கி வெட்கி விலகும்
என்ற வரிகளை
நான் முணுமுணுக்கிறேன்
ப.மதியழகன்