என்னால் அவளைப்போல் !
நடந்துகொள்ள முடிவதில்லை. !
இருப்பினும்... !
இதை அவளிடம் !
சொல்லிக்கொள்வதும் இல்லை..! !
உள்ளங்காலில் அடிபட்டால் !
உச்சந்தலைவரை வலிக்கிறது !
அவளுக்கு. !
காயங்கள் குறித்த !
வேதனைகளை !
என்னைவிட அவள்தான் !
உணர்ந்துகொள்வது அதிகம். !
இது ஒரு !
உயிருள்ள உறவு தொடர்பான !
உணர்வின் வெளிப்பாடென்று !
எங்களில்... !
இதுவரை பலர் !
விளங்கிக்கொள்வதில்லை. !
பாசத்தின் கோடுகளையும் !
மனிதத்தின் அடையாளத்தையும் !
இதயத்தின் சத்தங்களையும் !
கன்னத்தின் காயங்களையும் !
உணரமுடிகின்ற குறியீடாகத்தான் !
இன்னும் அவள். !
தாலாட்டுப்பாடி !
சமாதானமாகப்பேசி !
ஒருவழியாக... !
உறங்கவைத்த பின்பும் !
காயம்பட்ட !
குழந்தையின் அழுகுரல்கேட்டு !
இதோ வருகிறேன் என !
குரல்கொடுத்தபடியே !
பக்கத்து அறையிலிருந்து !
பதறிக்கொண்டு ஓடிவருகிறாள். !
இப்படித்தான்... !
எங்களின் கதறல்கள் கண்டு !
தாங்கமுடியாமல் !
பக்கத்துநாட்டிலிருந்தும் !
பல இதயங்கள் !
எங்களுக்காகவே உரத்தகுரலில் !
பேசிக்கொண்டிருக்கின்றன என்பது !
இன்னும்... !
எத்தனைபேருக்கு தெரியும்...? !
--- த.சரீஷ் !
03.02.2006 (பாரீஸ்)
த.சரீஷ்