வேடிக்கைக் மனிதரங்கே - புஸ்பா கிறிஸ்ரி

Photo by Seyi Ariyo on Unsplash

நாட்டில் அவலமங்கே!
ரோட்டில் வாருங்கள்!
போராடிக் காத்திடுவோம்!
வாதாடிச் சமர்புரிவோம்!
மாணவர் சமூகமிங்கே!
மண்டியிட்டுக் கேட்டுநிற்க!
வீட்டுச் சோறுதின்று!
ஏப்பமிட்டு இடைபெருத்து!
கூச்சலிட முடியாதென்று!
காச்சலென்று பொய்சொல்லி!
நாடகமாடி நடித்திடும்!
வேடிக்கை மனிதர்களுமிங்கே!
வீதிக்கு வந்து எங்கள்!
பாதையை மறைத்து நீங்கள்!
சாலை மறியல் செய்யாது!
காலையே ஊர்போங்கள்!
கனடா எம் நாடென்று!
கனமாய் கூறும் கூட்டமொன்று!
அரசியல் லாபம் தேடும்!
அதிகார வர்க்கங்களூம்!
பழிபாவமென்று வாய்மூடி!
தனிமையாய் விட்டிட!
தடியடித்திடும் போலிசும்!
வேடிக்கை மனிதர்களே!
நாதியற்றவர்களாய்!
நல்லவன் வழிசென்று!
வாழ்வோம் என்றோரு!
நம்பிக்கை கொண்டிங்கு!
வாழும் மாணவர்கள்!
உண்வை, உடையை!
உறக்கத்தை மற்நது!
தயக்கமின்றி மயக்கமின்றி!
தன்னம்பிக்கை உணர்வுடன்!
தேடிக்கிடக்கின்றார் வீதிகளில்!
அவர் பின்னே நாமும்!
வேடிக்கை மனிதர்களே!
விடியலொன்று வேண்டுமென்று!
வேதனை மனத்துடனே!
மரணத்து பயத்துடன்!
அரக்கரது மிரட்டலுடன்!
வாழ்க்கையை வெறுத்துத்!
தாழக்கையை பதித்து!
குறுகிய வாழ்வைத் தேடி!
குறுக்கப்பட்ட மக்களிவர்!
நச்சுப் பாம்புகளிடம்!
பிச்சை கேட்டுக் கையேந்தி!
எச்சிலான மனிதரது!
துயரமும் வேடிக்கைதானோ?
புஸ்பா கிறிஸ்ரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.