01.!
கனவென்ன கனவே!
-------------------------!
ஏன் இப்படி!
கனவுகள் வருகின்றன!
சில கனவுகள் மனதை லயிக்கச் செய்கின்றன!
சில கனவுகள் விந்தையாக இருக்கும்!
சில கனவுகளில் புழல் சிறையிலிருப்பேன்!
சில கனவுகளில் அரசராக அரியணையில்!
சில கனவுகளில் வீரனாக போரில் மடிவேன்!
இதைப் போன்றதொரு கனவில் தான்!
இப்போது ................... இப்பெயரில்!
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!
இக்கனவிலிருந்து விழிப்பு வரும் வரை!
அக்கனவினில் ஆழ்ந்த லயிப்பு தொடரும்!
கனவென்ன கனவே!
காண்பவையாயினும் கனவென்ன கனவே!
நினைவில் வை மனமே!
காண்பவையாவும்!
அநித்யம் என்று!
நினைவில் வை மனமே.!
02.!
நாளைய பொழுது!
---------------------!
பிறப்பு!
வாழ்வு!
இறப்பு!
மழை!
வெயில்!
பனி!
போகம்!
ரோகம்!
யோகம்!
இயந்திரத்துடன் வேலை!
செய்து!
எந்திரன் ஆனேன்!
நாளைய பொழுது!
நல்ல பொழுதாகுமென்று!
இன்றைய படுக்கையை!
விரிக்கின்றேன் !
கனவுலகம் வாரியணைத்து!
அன்றைய களைப்பை!
நீக்குகின்றது

ப.மதியழகன்