மதத்தின் பெயரால் நடந்த சமர்களில்!
மண்ணில் உதிரம் சிந்தி!
மாண்டவர்கள் எத்தனை கோடி !
கிணற்றுத் தவளையாய்!
தாங்கள் சார்ந்துள்ள மதமெனும் கேணியே!
சமுத்திரத்தைவிடப் பெரியது - எனச் சவடால்பேசி!
உண்மைக் கடலைக் காணாது!
காணாமல் போனவர்கள்!
எத்தனை கோடி !
சத்தியத்தின் பொருட்டு!
பல இன்னல்களை அனுபவித்து!
உத்தமராய் ஒருவர் வாழ்ந்தாரென்று!
அவரைப் புகழ்ந்து!
அன்றாடம் பாக்கள் பாடிக்கொண்டிருப்பதை விட!
அந்த நேரத்தில்!
அவ்வாய்மையின் வழியே!
நம் வாழ்க்கைப் பாதையை!
அமைத்துக் கொண்டிருக்கின்றோமா-என!
எண்ணுபவர் எத்தனை பேர் !
நியாயத்தராசில் நிறுத்தால்!
தயை சிறிதுமின்றி!
சொர்க்கத்தை அடையும் பொருட்டு!
வெளிப்பூச்சாக செய்யப்படும் நற்காரியங்கள்,!
பகுத்தறிவால் விழிப்புணர்வை பரப்புவர்!
மனவளர்ச்சிக் குன்றியவர்களுக்கு!
மனித நேயத்தோடு செய்யும் காரியம்!
சிறிதெனினும்!
அதற்கு ஈடாகுமா !
இன்னும் உங்களுக்கு!
மனிதர்கள்பால் பாகுபாடு தென்படுகிறதா!
அப்படியென்றால்!
மதமெனும் மூக்குக்கண்ணாடியை!
கழட்டிவைத்துவிட்டுப் பாருங்கள்!
உண்மையில் ஒரு தெய்வம்!
உன்னைப் பற்றிய நினைப்பிலேயே!
உறங்காமல் வீட்டில்!
தினம் உனது புகைப்படத்தை!
உச்சிமுகர்ந்து கொண்டிருக்க!
உயிர் தந்து, உண்டி கொடுத்து வளர்த்த!
உன் தாயைவிடவா!
உயர்ந்த தெய்வம் இத்தரணியிலிருக்கு?!
ப.மதியழகன்