உதிரும் சருகுகள்!
சத்தமின்றி!
காற்றின் போக்கில்..!
விருட்சத்தின் வரலாற்றை சுமந்த படி..!
வார்த்தைகள் செதுக்கும்!
மனதிற்கு தெரியும்!
காற்றின் திசையில்!
பயணித்தல் .. வாழ்க்கையென...!
என்னின் வேர்களின்!
முடிச்சுகளில்!
இன்னும் மூச்சுவிடா..!
விருட்சங்கள்!
தூங்கிகொண்டிருகின்றன...!
பிரபஞ்ச வெளியில்!
முகவரி சொல்லா!
பயணம் ..!
விதைகளும் தூசிகளாகும்போது ....!
ஆயின், தூசிகள் இடம் சேர்ந்தால்!
தூண்களாகும்..!
அதுவரை!
எனது பயணத்தின்!
படிமானங்களாய்!
பயணம் செய்கிறேன்..!
காற்றின் திசையில்..!
காற்றின் வலு குறையின்!
விழுந்த இடத்தில்தான்!
உன்னின் அறிமுகம்
பொன்னியின் செல்வன்