காற்றுக்கும் மறுபக்கம் உண்டு!
புயலென புறப்படுவது!
தென்றலின் மற்றொரு வடிவம் தானென!
நீங்கள் ஏற்கனவே அறிந்த ஒன்று. !
கடலுக்கும் மறுபக்கம் ஒன்றுண்டு!
இதமாய் கால்களை வருடிச் செல்லும் அலைகள்!
ஒரு கறுப்பு நாளில் புறப்படும்!
ஆழிப்பேரலையாய் ஆக்ரோஷம் கொண்டு... !
நிலத்துக்கும் மானிட இனம் அஞ்சும்!
மறுபக்கம் ஒன்றுண்டு!
நமக்கு அபயமளித்துக் காத்துவரும் இப்புவியே!
பூகம்பத்தால் விழுங்கும்!
குவியல் குவியல்களாக!
அப்பாவி மக்களை உயிரோடு... !
அக்னிச் சுடருக்கும் மறுபக்கம் உண்டு!
குடும்பமே தீயின் கொடிய நாக்குகளுக்கு இரையான!
எண்ணற்ற துயர சம்பவங்கள்!
இம்மண்ணில் நடந்ததுண்டு. !
வானுக்கும் மறுபக்கம் உண்டு!
நாமனைவரும் வியந்து பார்க்கும் வானமே!
விண்கற்கள் மூலம் விஸ்வரூபம் கொண்டு!
நம்மோடு நேரடி யுத்தம் புரிவதுண்டு. !
மனிதனுக்கும் மறுபக்கமுண்டு!
சரித்திர நாயகர்களது!
சில ரகசியங்கள் மற்றர்களுக்குத் இறுதிவரை!
தெரியாமலேயே!
அவனோடு அவனுடைய அந்தரங்கமும்!
கல்லறையில் புதைந்து போவதுண்டு. !
மண்ணில் வந்து பிறந்திட்ட!
சின்ன சின்ன அரும்புகளிடம்!
மறுபக்கத்தை தேட இயலுமா?!
சமுதாயம் அந்தக் குழந்தைகளை!
கூர் நகங்கள் கொண்ட கருமையான!
தனது கொடிய கரங்களால்!
அரவணைக்கும்போது!
அப்பிஞ்சுகளுடைய அகமும், புறமும்!
முற்றிலும் வெவ்வேறாக,!
கோரமாக மாறிப்போக!
நூற்றுக்கு நூறு சதவீதம்!
வாய்ப்புண்டு
ப.மதியழகன்