நாளைக்கு எண்ணிக்கொள்ளலாம்
இன்று எண்ணாமல் விட்ட
நட்சத்திரங்களை
வேட்டுச் சத்தம்
மிரண்ட மாடு
தொழுவத்திலிருந்து
அறுத்துக் கொண்டோடியது
வசந்தத்தை
எதிர்பார்த்து
மரமும்,மக்களும்
முன்பனி
பின்னிரவில்
ஊளைச் சத்தம்
வேனிற்காலம்
நீர்ச்சுனையில்
காகங்கள் நீராடும்
இருள் கவிந்த வானம்
வெளிச்சத்துக்கு
விடைகொடுக்கும்
நதிநீரில்
அகல்விளக்கு
லாவகமாய் மிதக்கும்

ப.மதியழகன்