மரணமே இன்று வராதே!
முடிக்கப்பட வேண்டிய வேலைகள்!
நிறைய இருக்கின்றன!
சம்பளத் தேதியில் இறக்க!
யாராவது சம்மதிப்பார்களா!
கட்டப்பட்ட வீட்டில் குடிபுக!
ஆசையிருக்காதா!
தவழும் குழந்தை!
தத்தி நடப்பதை காணாமல்!
போய்விடத் தோன்றுமா!
மனிதனின் சராசரி வயதின்!
பாதியைக் கூட இன்னும் கடக்கவில்லை!
நரைமுடி கூட ஆங்காங்கே!
இன்னும் தோன்றவில்லை!
உறுப்புக்கள் எதுவும் செயலிழக்கவில்லை!
பார்வைத்திறனும் குறையவில்லை!
அன்பிற்கினியவர்கள் ஒவ்வொருவராய்!
காலனின் அம்பு பாய்ந்து!
வீழ்ந்த போது!
தெரிந்து கொண்டேன்!
எனக்குத் தான்!
குறி வைக்கிறார்களென்று.!
ப.மதியழகன்