வகுப்பிலொரு ஆசான்!
வரும் பதவியுயர்ப்!
பரீட்சைக்காய் விழுந்தடித்துப்!
படிக்கின்றார் பாலகர்முன்.!
இன்னுமொரு ஆசான்!
இன்சிரியூட் பாடங்களை!
இதமாய்த் திருத்துகிறார்!
இதுவும் வகுப்பறையில்தான்.!
சொந்த வேலையென்று!
சோலிகளைக் கவனிக்க!
சென்றிடுவார் இன்னொருவர்!
சோக்குக்கட்டிகளை எறிந்துவிட்டு.!
செல்போனைக் கையிலெடுத்து!
சேதி அறிந்திடுவார்!
'வருகிறேன் இதோ' என்று!
பைக்கை முறுக்கிடுவார் வேறொருவர்.!
அதிபரும் பிள்ளைகளும்!
அமைதியாய் இருப்பதுகண்டு!
ஆச்சரியப்படுவர் மற்றைய!
ஆசான்கள் ஆத்திரத்துடன்.!
ஆத்திரப்படும் ஆசான்கள்!
அல்லா ஹ்வுக்குப் பயந்தவர்களாம்!
அப்படியும் ஒருகதை!
அங்கு உலவுகிறது.!
பிள்ளைகளின் பள்ளிவிட்ட!
பின் படிப்பும் (ரியூஷன் கல்வி)!
அதிபரின் 'ஷசைட்' வருமானமும்!
அந்த ஆசான்களின் கையில்தானாம்.!
!
-எஸ்.ஏ.ஹப்பார்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்