மழை - மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Photo by FLY:D on Unsplash

எஸ். ஏ. ஹப்பார் !
மழையின் முதற்துளி !
மண்ணில் விழுமுன் !
முதற்சென்று நிற்பாளென் !
மூத்த மகள். !
காலில் செருப்பிருக்காது !
கையில் குடையிருக்காது !
தலையில் தொப்பியிருக்காது !
தரையில் காலுமிருக்காது. !
மழைதான் அவளுக்கு நண்பன் !
மழைதான் அவளுக்கு உணவு !
மழைதான் அவளுக்கு உறக்கம் !
மழைதான் அவளுக்கு எல்லாம். !
தொப்பாகி நிற்பாள் !
தோணிவிட தொடர்மழையில் !
மிஞ்சாது அந்நாளில் !
மின்சாரப் பட்டியலும் !
தொலைந்து விடும் !
தொலைபேசிப் பட்டியலும். !
புத்தகத்தின் நடுப்பக்க மெல்லாம் !
புதிய மழைக்குச் சொந்தம் !
கதிகலங்கி நிற்பாள் என்மனைவி !
கட்டுப்பாடு பெண்ணுக்கு வேண்டுமென்று. !
என் பிள்ளைப்பருவம் எண்ணிப்பார்ப்பேன் !
பின் நானும் நின்றுரசிப்பேன் !
பிள்ளை வளர்க்கத் தெரியாதென்பாள் !
பின் அவளும் வந்துரசிப்பாள். !
எண்ணிப் பார்த்தது !
நான் மட்டுமல்ல !
என் மனைவியும் தான்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.