1.காதல் திருட்டு!
-----------------------!
அவளைத் தொலைத்துவிட்டு!
அகிலமெலாம் தேடுகிறேன்.!
ஆசையாய்த் துடைத்து!
அன்பு முத்தமிட்டு!
அழகாய் வைத்திருந்தேன்!
அரைக்கைச் சட்டைக்குள்.!
அலுவலக உபயோகத்திற்காய்!
அவ்வப்போது பதிவுசெய்த!
ஆயிரம் இலக்கங்கள் - அவளை!
ஆக்கிரமிப்புச் செய்தன.!
நிஜக் காதலியின்!
நித்திரைச் செய்தியெல்லாம்!
அவளுள்தான் அமைதியாய்!
அடங்கிக் கிடந்தன.!
மகாபொலவில் புது!
மணத் தம்பதிகள்!
கைகோர்த்துச் சென்றதையும்!
கிளிக்செய்து வைத்திருந்தேன்.!
செல்லிடம் என்பதால்!
சென்றுவிட்டாயோ என்னிடம்!
சொல்லிக் கொள்ளாமல்!
செருக்குடன் நீ!!
தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்!
தொலைபேசிக் காதலியை!
தெரிந்தவர்கள் தயவுடன்!
திருப்பித் தந்திடுங்கள்.!
காதலைத் திருடுவது - உங்களுக்குக்!
களங்கமெனத் தெரியாதா? !
2.கல்லாய்ச் சமைந்து...!
---------------------------!
வாசல் தோறும் உன்வரவை!
எதிர்பார்த்துக் காத்து நிற்பேன்!
யாசகம் என்றெண்ணி எட்டிநிற்பாய்.!
அண்ணன் வருகை கண்டு!
அண்ணார்ந்து பார்க்கும் நீ!
அந்நியமாய் எனைக் காட்டிக்கொள்வாய்.!
மழையென்று மரத்தடி ஒதுங்கி!
தளையொன்றை உசுப்பி விட!
ஏளனமாய் எனைப் பார்ப்பாய்.!
கடலை வண்டிக் காரனிடமும்!
கச்சான் விற்கும் சிறுவனிடமும்!
கண்ணசைத்து ஜாடை காட்டிடுவாய்.!
உனை ஆவலாய் முத்தமிட!
நெருங்கும் போதெல்லாம் நீயென்னை!
அரைவேக்காடு அசிங்கம் என்பாய்.!
ஆசையாய் உன் கரம்பிடித்து!
அன்பு மொழி பேசி!
அழகழகாய் ஐந்தாறு பெற்றெடுத்து!
அரசாள எண்ணி யிருந்தேன்.!
சுனாமிப் பேயலை வில்லனாய்மாறி!
உனை சுருட்டிச் சென்றபோது!
கல்லாய்ச் சமைந்து நின்றேன்!
எல்லாக் காலமும் போல்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்