மீண்டுமொரு சந்தர்ப்பம் - மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Photo by Ramona Kudure on Unsplash

இருளின் பிடியின்!
இறுக்கத்தைத் தளர்த்தி!
கதிரவன் மெல்லமெல்ல!
கண்திறந்து பார்க்கிறான்.!
உலகம் இன்னும்!
உறங்கிக் கிடக்கிறது,!
பறவைகளும் மிருகங்களும்!
புல்-பூண்டுகளும் தவிர.!
பூச்சிகளும் தாவரங்களும்கூட!
புத்துயிர்பெற்று - தங்களை!
உயிர்ப்பித்துக் கொண்டு!
உற்சாகமாய் உறக்கம்கலைத்தன.!
மெல்ல மெல்ல!
வெளிச்சத்தைப் பரப்பி!
உலகம் முழுவதையும்!
ஆக்கிரமித்துக்கொண்டான் கதிரவன்.!
மாற்றமில்லை மாற்றமேயில்லை!
மனிதரில்மட்டும் மாற்றமில்லை!
கொலை பொய்-களவு!
கள்ளருந்தல் குருநிந்தை.!
பஞ்சமா பாதகங்கள்!
பரவிக் கிடக்கும்!
உலகைத்தான் காண்கிறான்!
உச்சிக்குயர்ந்துவிட்ட கதிரவன்.!
வெட்கித் தலைகுனிந்து!
விழிதாழ்த்தி மீண்டும்!
சிறை கொள்கிறான்!
சினங்கொண்ட இருளின்பிடிக்குள்.!
நாளையொரு சந்தர்ப்பம்!
காலை வருமென்று!
மாலைச் சூரியன் - தன்!
வாலைச் சுருட்டிக் கொண்டான்.!
!
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.