வாழ்க்கை - மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Photo by Tengyart on Unsplash

ஒற்றைக் கம்பியில் !
ஒருக்கணித் தமர்ந்து !
ஓரக்கண்ணால் காணும் !
ஓராயிரம் காட்சிகள். !
நீண்ட தொலைவில் !
நீள் பனையொன்று - அதன் !
நிழல் வழியே !
நிம்மதியாய் இருநாய்கள். !
ஆகாய உச்சியெட்ட !
ஆலாக்கள் இரண்டு !
அதன் பின்னே !
அழகிய கிளிகள்பல. !
வயலில் வயதான !
விவசாயிகள் பலர் !
வடிவாய்ச் செப்பனிட !
வடிச்சலுக்காய் வாய்க்கால்களை. !
கொங்கை குலுங்கிட !
மங்கையர் பலர் !
களை கொள்ளும் !
கண்கொள்ளாக் காட்சிகள்பல. !
சக்கரச் சவட்டுதலில் !
சில புழுக்கள் - அதைக் !
கொத்தித் தின்ன !
கொக்குகள் பல. !
வீதியால் வந்தவனை !
வேருடன் பிடுங்கி !
வயலில் விட்டெறிந்த !
விபத்து ஒன்று. !
பஸ் மிதிப்பலகையில் !
பயணம்செய்த இளைஞன் !
பரிதாபமாய் விழுந்ததை !
பார்த்துச்சிரிக்கும் இளசுகள். !
வலதுகையை உரசிக்கொண்டு !
விரைவாய்ச் செல்லும் !
பாதுகாப்பு வாகனமொன்று !
பாதசாரிக்கு பாதுகாப்பின்றி. !
அழகழகாய் அணிவகுத்து !
அவசரமாய் பறந்துவந்த !
வாகனங்கள் அனைத்தும் !
வந்த அரசியல்வாதிக்காய். !
இத்தனையும் பார்த்துரசித்த !
இளைய காக்கை !
மற்றக்காலை உயர்த்தியபோது !
மரணம் மின்கம்பியில்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.