என் பெற்றோரை மட்டும்!
என் கண்களுக்குக் காட்டிவிடாதே!!
சுனாமிச் சுருள் அலைகளுக்குள்!
சிக்குண்டு சிறையுண்டு மாண்ட!
என் பெற்றோரை மட்டும்!
என் கண்களுக்குக் காட்டிவிடாதே!!!
டெனிம் காற் சட்டையும்!
ரீசேட்டும் இன்று எனக்கில்லை!
என் பிய்ந்த சட்டையையும்!
என் கிழிந்த சாறனையும்!
என் வாப்பா கண்டால்!
உயிர் நீத்திடுவார் என்முன்னே.!
என் ஒட்டிய வயிற்றையும்!
என் உப்பிய வதனத்தையும்!
என் உம்மா கண்டால்!
கண்முன்னே கதறி அழுதிடுவாள்!
நானும் சேர்ந் தழுவதற்கு!
என்விழிகளுக்குச் சொந்த நீருமில்லை.!
கட்டிய வீடும் காரும்!
பெட்டியில் துண்டுதுண்டாய்!
ஏற்றிச் சென்று கொட்டிய காட்சிகள்!
என் மனதில் மட்டும்!
மாறாப் பதிவுகளாய் இருக்கட்டும்.!
நாளை ஒரு காலம்வரும்!
நானும் வீடுகட்டிக்!
குடியிருப்பேன் இன்று என் வீடு!
வீதியாய் விரிந்து கிடந்தாலும்.!
-மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்