சீதனம் கேட்காத மாப்பிள்ளை - மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Photo by FLY:D on Unsplash

சீதனம் வேண்டாம் எனக்கு!
சீர்வரிசையும் வேண்டாம் எனக்கு!
சின்னத் தங்கை மணப்பதற்கு!
சில இலட்சங்கள் தந்தால்போதும்.!
காரொன்றும் தந்திடுங்கள் மாமாவின்!
கௌரவத்தைக் கட்டிக் காப்பதற்கு!
மாடிமனை கொடுத்திடுங்கள் மாமா!
மகளை மற்றவர்கள் மதிப்பதற்கு.!
உப்பு டையில் ஊறவைத்த!
உவப்பான வண்ணவண்ண சாரங்கள்!
உலகை எல்லாம் வலம்வந்த!
காலத்தில் சேர்த்த பணம்!
பத்திரமாய் கூட்டு வட்டியுடன்!
பத்திரத்தில் காத்துக் கிடப்பதையும்,!
தங்கச் சுனாமி யொன்று!
தரை வழியே வந்தபோது!
தந்திரமாய் ஓடிச் சென்று!
தட்டிக் கொண்ட சொர்ணங்கள்!
பத்திரமாய் பணப் பெட்டியிலே!
பாளங்களாய் பதுங்கிக் கிடப்பதையும்,!
கண்டு கண்டு கண்பூத்து!
கடைசியிலே கண்ணான மாமனிடம்!
பெண் கேட்டு வந்துவிட்டேன்!
சத்தியமாய் சதமேனும் சீதனமாய்!
பத்திரத்தில் எழுத வேண்டாம்!
அத்தனையும் கொடுத்திடுங்கள் அருமைமகளுக்கு!!
பளார் என்றென் கன்னத்தில்!
பாவி மனச்சாட்சி அறைந்ததுவோ!!
பக்கென விழித் தெழுந்தேன்!
பகலிலும் சீதனக் கனவுதானோ!!
சீதனமே இனி வேண்டாம்!
சீர் திருந்தி வாழப்போறேன்.!
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.