புலன்களுக்குள் புகுந்து!
இமைகள் பிரித்து!
கனவுக் கதவுகளின் வழி நடந்து!
கறுப்பு வெள்ளைக் கனவுகளையும்!
சிவப்பாக மாற்றி!
இரவுகளும் அலைக்கழிந்து!
உணர்வு நரம்புகளை!
உழுதெடுக்க...!
இறந்தேன் என்று அலறி!
எழும்புகையில்...!
சாத்தானைப் போல!
அடுத்தநாள் புலர்கையிலும்...!
கட்டிலின் ஓரத்தில்!
எனக்கு முன்னதாய்!
எழுந்து குந்தியிருக்கிறது!
எங்கள் வலி.!
கவிதா. நோர்வே