எம் பெயரை நாம்!
கூவுவதில்லை!
அடையாளப்படுத்துவது வேறு!
அறைகூவல் விடுவது வேறு!
சொல்லிக் கொள்வதால்!
நீ நீயாக முடியுமா!
நான்தான் வானாக இயலுமா!
தாழ்வு மனம் புதைத்து!
வேர்கள் படர்த்தி!
விருட்சம் வளர்!
முங்கில் ஒடித்து!
பிரம்புகள் செய்தோம்!
இனி அதை எடுத்து!
துளை இட்டு!
இசைக்குழல் செய்வோம்!
கொடும் மரணமுற்ற மனிதர்கள்!
செதுக்கிய உயிலில்!
மனிதனாய் இருக்கச் சொல்லி!
மனு இருக்கிறதே!
படிக்கவில்லை?!
நாய்களும்!
நரிகளும்!
பூக்களும், !
புதர்களும் போல!
நாமும்!
உலகின் மனிதர்களாய்!
கூடி சமைப்போம்!
நாம் தமிழன் என்று!
இனியாவது!
அவனைச் சொல்லவிடு!!
முடியும்!!
நீ மனிதன் என்று!
பெயர் மாத்து!!
!
- கவிதா நோர்வே
கவிதா. நோர்வே