ஒரு தீவு!
ஒரு நிலவு!
ஒற்றை மரம்!
கரையில் ஓடம்!
காத்திருக்கிறேன்!
நான் மட்டும்!
கலைத்துப் போகும்!
காற்றைப் போல்... !
என் முடிஅலையும்!
உன் கைகளுக்காகவே!
பின்னி விடும்!
என் கூந்தலையும், என்னையும்!
கோர்த்துக்கொள்!
உன் விரல்களில்!
நான் !
தீட்டி வந்த கண்மை...!
என்னை பின்னிப்போடும்!
உன் விழிகளுக்காகவே!
ஸ்தம்பித்துவிடும்!
என் காட்சிகளையும்!
கலைத்துப் போடு!
உன் கட்டுப்பாட்டிற்குள் !
நான் உடுத்துவரும்!
சேலையெல்லாம்!
தேவதையென்று சொல்வாயே!
அந்த வார்த்தைக்காகவே !
உடுத்துக்கொள் என்னை!
விடுதலை செய்!
அந்த ஒற்றை பூவையும்!
என் உதட்டின்!
மென்சாயமெல்லாம்!
அள்ளிப் போகும்!
உன் உதடுகளுக்காவே!
அறுவடை செய்!
உனக்காகத்தானே!
எனது விளைநிலங்கள்!
வட்ட நிலவொளியில்!
வையகம் மறந்திடலும்!
கவிதை விரல்களால்!
மெய்க் காவியம் எழுதிடலும்!
ஓசையற்ற இசைப் பயணம்!
ஓடம் அழைக்கிறது!
வா!!
போய் வரலாம் அக்கரைக்கு!
விடை கொடு!
வார்த்தைக்கு
கவிதா. நோர்வே