இது எனது வீடு.!
இந்த வீட்டின்!
ஓவ்வொரு மூலையும் என்னுடையவை.!
ஓவ்வொரு மூலையும் தனித்துவமானவை!!
இதோ!
இந்த மூலையில்!
இரண்டு பாத்திரம், நாலு கரண்டி!
ஒரு அடுப்பு…!
எல்லாம் எனது!
எதிர் மூலையில்!
எனக்கென்று வாங்கித்தந்த!
பெரும் இயந்திரங்கள்!
துணிகள் துவைக்கவும்..!
காயப்போடவும்..!
ஒவ்வொரு அறையிலும்!
பெரிய அலமாரிகள்!
காய்ந்ததை அடுக்கவென்று!
வலப்பக்கம் !
இருக்கும் மூலையில்தான்!
படுக்கையறை.!
படுக்கவும்…!
கலைக்கவும்…!
பின் விரிக்கவும்!!
அதன் இடப்புறமும்!
எனது மூலைதான்!
ஒரு தொட்டில்!
பால் போத்தல்கள்!
பொம்மைகள்!
அழுக்குத் துணிகள்...!
டீவி,!
மேசை, !
இருக்கைகள்.!
ஆதன் மேல் எறியப்பட்ட!
பொருட்கள்.!
அடுக்கவும் துடைக்கவும்!
சாப்பாட்டு மேசை,!
தூசி தட்ட பலவித பொருட்கள்.!
எல்லாம் என்னுடையவைதாம்!
வீட்டின் பொறுப்பானவர் என்ற!
பெயரில்!
வீட்டுப்பத்திரம்!
மட்டும் !
என்னை மொத்தமாய் ஆட்கொண்டான்!
பெயரில்!
-கவிதா. நோர்வே
கவிதா. நோர்வே