இரு கோல்கள் சங்கமிக்கும்!
வழிமண்டலம்!
இரு துருவங்கள் இணையும்!
மையப்புள்ளி!
வேற்றுகிரகத்து மனிதர்களாய்!
முதல் சந்திப்பின்!
ஆய்வுகள் இனிப்பதில்!
அவசர இணைப்பு நடைபெறுகிறது!
தன் உடமை காத்தல்!
வாரிசு உறுதிப்படுத்தல்!
கற்பென்ற பேரில் காப்புரிமை!
ஆணுக்கும்!
கலாச்சாரம் பேணல்!
பண்பாடு ஊட்டல்!
எனக்குமட்டும் என்ற நம்பிக்கை!
பெண்ணுக்கும்!
சொத்துக்கள் பெருக்கவும்!
வாரிசு வளர்க்கவும்!
நியமிக்கப்படும்!
இரு அதிகாரிகளின்!
குடும்ப ஸ்தாபனம்!
எப்பொழுதுமே!
மேலதிகாரியாய் அமர்த்தப்படுகிறான்!
அவன்!
மரபுகளை முறித்துக்கொண்டு!
துளிர்த்த காதலையே!
சருகாக்கும் திருமணஸ்தாபனத்திம்!
கல்யாண மேடையில்!
எப்போதுமே ராஜா வேஷம்!
அவனுக்கு!
காதலும் வேஷம் போடுமிடத்து!
இருவருமே கைதேர்ந்த நடிகர்கள்!
ஒருவனுக்கு ஒருத்தியென்றது!
கட்டாயப்படுத்தலாய் அமுழுக்கு வருகிறது!
இரகசியத்தில் திருத்தியெழுதப்படுகிறது!
பழைய தீர்ப்புகள்!
இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை!
என்ற பொழுது!
திருமணம் ஒரு நல்ல வழிதான்!
இல்லையென்றால்!
காதலுடன் வாழ!
கல்யாணமெதற்காம்?!
இருந்தும்!
நிறுவப்படுகின்றன!
புதிய புதிய நிறுவனங்கள்!
பெரிசுகளின் வழிநடத்தலில்!
பின்னே செல்ல!
அத்தனையும் ஆட்டுமந்தைகள்!
!
-கவிதா நோர்வே
கவிதா. நோர்வே