எனக்குத் தெரியும்!
எம் மண்ணில்!
வசந்தம் ஒருநாள்!
மலருமென்று!
இழப்புகளை ஒருநாள்!
இழப்போம் என்று!
அன்று !
அழிந்த வீதியெல்லாம்!
தோரணங்கள் கட்டப்படும்!
என் இடிந்த வீட்டை!
மாமா புதுபித்துத் தருவார்!
பூஞ்செடிகளில் பூக்கள்!
புத்துயிர் பெறும்!
என் பழைய சினேகிதர்கள்!
மீண்டும்!
அறிமுகமாவார்கள்.!
இருள் மறையும்!
என் அம்மா வருவாள்!
என் மாமன், மாமி!
வருவார்கள்.!
மடித்துக் கட்டிய !
அழுக்கு வேட்டியுடன்!
என் தாத்தா வருவார். !
என் மச்சான் வருவான்!
தேசத்திற்காய் உயிர் நீத்தவர்கள்!
என்ற மாவீரர் பட்டியலில்!
என் அப்பாவும் !
வருவார். !
!
-கவிதா நோர்வே
கவிதா. நோர்வே