01.!
முதுகெலும்பற்றவன்!
-------------------------------!
தானாகவே மூளை சுவாசிக்க!
தானாகவே இதயம் துடிக்க!
துடுப்பு இல்லாமல் நீந்துகிறேன்.!
எல்லை கடந்து!
இலக்கு இன்றி!
நடந்து கொண்டிருக்கிறேன்!
ஒரு பேரழிவின் நடுவில்.!
ஒரு பூனையின்!
கூரிய நகமுனையில் சிக்கிய!
நூல் கண்டைப்போல!
ஒரு கட்டுக்கதையின்!
கூர் வெளிச்ச முனையில்!
சிக்குண்டு கிடக்கிறது எதிர்காலம்.!
உள்வாங்கிய வயிற்றில்!
வலியின் மிச்சம்!
இன்னும் இருக்கிறது.!
தலை சுற்றுகிறது!
மூளை வேலைசெய்வதால்.!
வாழ்வின் எச்சம்!
குப்பையில் வீழ்கிறது.!
முதுகெலும்பை அழுத்திக்கொண்டு!
முதுகின்மீது-!
ஒரு கரடி உட்கார்ந்திருப்பது போல் உணர்வு.!
முதுகெலும்பா. . . ?!
அதுதான் எனக்கில்லையே !!
02.!
துரோகத்திற்கு முந்து!
--------------------------------!
. . . ஆகவே!
துரோகத்திற்கு முந்திக்கொள்.!
இருவருக்கும் இடையிலிருப்பது!
நட்புறவு இல்லை.!
அது ஒரு!
குரு-சிஷ்யன் உறவு.!
நீ உணர்த்தும் வலி!
அவன் விளங்கிக்கொள்ளும் பாடம்.!
உன் நடிப்பே கொலைவாள்!
நீ பின்னும் சூழ்ச்சியே!
கொலைக்களம்.!
உனது அதீத கற்பனைகளின் ஏவள்!
அவனைச் சூழும் தரித்திரம்.!
நீ குடிக்கும் மதுவும்!
புகைக்கும் சிகரெட்டின் தீக்குச்சியும்!
நீ புணரும் யோனியும்!
அவன்தான்.!
வாழ்வின் நோய்!
கடைசியில்-!
என்ன கொண்டு வந்து சேர்த்துவிடப் போகிறது ?!
ஆகவே-!
துரோகத்திற்கு முந்து!
இருவருக்கும்!
வாரிசுகள் உள்ளன

மகரந்தன்