அன்பெனும் ஆலயத்தில்!
பாசமெனும் தீபம்!
ஏற்றி வைத்ததோ!
அன்னையெனும் தெய்வம்!
அம்மாவின் அரவணைப்பில்!
அடங்கும் மனத்துயரம்!
அகிலத்திலில்லை அன்னைக்கு!
ஈடாய் ஒரு செல்வம்!
பாசத்தைப் பொழிவாள்!
பலனொன்றும் வேண்டாள்!
நேசத்தில் மலர்வாள்!
நெஞ்சத்தில் பூத்திடுவாள்!
கண்ணீரைக் கண்டால்!
கலங்கித் தவித்திடுவாள்!
உடல் கொஞ்சம் துவண்டால்!
உயிர் வாடித் துடித்திடுவாள்!
பட்டம் பெற்றவரோ அன்றிப்!
பாராரியாய்த் திரிபவரோ!
தெய்வமவள் கண்ணுக்கு!
தெரிவதில்லை வேறுபாடு!
தானுண்ண மாட்டாள்!
தன் சேய் உண்ணுமட்டும்!
கண்மூடமாட்டாள் அவள்!
கண்மணி கண்ணயருமட்டும்!
ஆண்டவனின் படைப்பினில்!
அற்புதம் உண்டென்றால்!
அன்னை என்னும் அந்த!
அதிசயம் ஒன்றுதான்!
என் தாயின் தியாகத்தை!
ஏற்றி நான் போற்றினேன்!
மகனுடைய நலனுக்காய்!
மகத்தான சேவை செய்தாள்!
தந்தையாக நானாகி!
தத்தளித்த வேளையிலே!
தன் மகனுக்காய் உருகிய!
தாரத்தின் பெருமையுணர்ந்தேன்!
அன்னையர் தினத்திலே!
அவளுடைய நினைவு காக்க!
அம்மாவாய் திகழ்கின்ற என்!
மனையாளின் புகழ் சொல்வேன்!
அன்னையர் தினமதிலே உங்கள்!
அன்புத் தெய்வங்களின் நினைவாக!
அருமை நண்பர்களே நீங்கள்!
மணந்தவளை போற்றிடுவீர்!
அன்னையர் தினத்தினில்!
அழியாத உண்மை சொல்வேன்!
மாதா மட்டும் அன்னையல்ல எமை!
மணந்த மனையாளும் அன்னைதான்!
!
-சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்