சக்தி சக்திதாசன்!
இதயத்தில் சுரக்கும்!
அன்பின் ஊற்றாய்!
இருட்டை அகற்றும்!
அறிவு விளக்காய்!
ஆசையெனும் நிழலை!
விரட்டும் ஆதவனாய்!
வையகத்தின் வரலாற்றில்!
வரமாய் ஜொலித்திடும்!
தேவமைந்தன் பிறந்தநாள்!
அன்பிற்கோர் திருநாள்!
தன்னைப் போலே!
பிறனையும் நேசி!
தவறாத உண்மையை!
வேதமாக ஒப்பித்தான்!
மனிதர்களை ரட்சிக்க!
மண்ணிலே ஒருயிராய்!
மனிதர்கள் மத்தியில்!
மாபெரும் ஜோதியாய்!
ஞானத்தின் வழி நின்று!
வானமாய் விரிந்தவன்!
மதங்களின் பெயராலே!
மனிதர்களை பிரிப்பது!
மனிதாபிமானம் அற்றவர்களே!
மாபெரும் உண்மைதனை!
மறக்காமல் இருக்க!
மற்றையோரையும் !
தன்னைப்போல்!
மதிக்கச் சொன்னவன்!
மேரிமாதா மைந்தனாய்!
பாரினிலே விழுந்தவன்!
வாடிநின்ர உள்ளங்களை!
மாரியாய்ப் பொழிந்து !
நனைத்தவன்!
ஏழைகளின் காவலனாய்!
நாளைகளின் ரட்சகனாய்!
நேற்றைகளின் நினைவுகளில்!
சுகந்தமாய்க் கலந்தவன்!
கிறீஸ்துமஸ் திருநாள்!
கிறீஸ்தவர்களுக்கு மட்டுமல்ல!
அன்பை மதிக்கும் உள்ளங்கள்!
அனைத்துக்கும் பெருநாளே!
இனிய இத்திருநாளில்!
இதயத்தால் ஒன்றுபட்டு!
அனைவரும் மனிதர்களே!
அதிரவே கோஷமிடுவோம்!
தேவன் யேசுவின் போதனைகள்!
மனிதர் அனைவர்க்கும் பொதுவே!
அனைத்து நண்பர்களுக்கும்!
அன்பான கிறீஸ்துமஸ் வாழ்த்துக்கள்
சத்தி சக்திதாசன்