நான் செத்து நான் - முஷாரப் முதுநபீன்

Photo by Salman Hossain Saif on Unsplash

தனிமையின் தவாளிப்புகளுள்!
என் உணர்வுகள் ஒதுங்கிக் கொண்ட போது........!
நெல் மணிகள் !
எனைத்தூக்கி சொருகிக் கொள்கின்றன..!
எந்திர வலிமை !
என் வலிகளுக்கு வெளிச்சமாய்....!
அசதியாய்...!
மிக மிக அசதியாய் இருக்கிறது...!
அம்புகள் ஓரணியில் நின்று !
புள்ளியை பொத்தலாக்கிய!
நோவின் அந்தத்தில் கூட!
சகிப்புத்தனமை தீபமாய் ஒளிர்கிறது.!
இருந்காலும் குறி தவறிய!
அம்புகள் சில!
என் குரல்வளையை !
குத்தி காயப்படுத்துகிறது...!
ஓ..வென்று அழத்தோணுகிறது.!
அழுகிறேன்..விழுகிறேன்...!
விழுந்து விழுந்து அழுகிறேன்...!
ஒரு கண்ணீர்த்துளியின்!
மரணத்திற்கும் இன்னொரு!
கண்ணீர்த்துளியின்!
ஜனனத்திற்கும் இடையில்!
உயிர் சிக்கித் தவிக்கிறது...!
பெற்றோலுக்குள்ளும் !
குப்பி விளக்கினுள்ளும் மாறி மாறி!
உட்கார்ந்து விடுகிறேன்!
கையில் தீக்குச்சியோடு..!
ஏனோ தெரியாது!
யாரும் தீப்பெட்டி தருவதாயில்லை.!
இரண்டாம் முறையாய்!
தாயின் கருப்பைக்குள்!
தங்கி விடுகிறேன்!
இல்லை இல்லை..!
தொங்கி விடுகிறேன்.!
மீண்டும் பிறக்கிறேன்.!
மழழையாக அல்ல..!
இப்பிறவியில் எனக்கு!
உங்கள் நெருப்பெட்டி தேவையில்லை..!
இப்பிறவியில் நான்!
பெற்றோலுக்குள்ளோ..!
குப்பி விளக்கினுள்ளோ அல்லாமல்!
சூரியனில் உட்கார்ந்துள்ளேன்
முஷாரப் முதுநபீன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.