ஏதோ ஓசைகள்!
ஏதோ ஆசைகள்!
ஏதோ பாஷைகள்!
எங்கே தோன்றின ?!
ஆதியின்!
ஆரம்பமும் தெரியாமல்!
அந்தத்தின்!
முடிவும் புரியாமல்!
ஆடும் நாடகத்தின்!
அர்த்தம் தான் என்ன?!
சொல்லத் தெரியா!
வார்த்தைகள்!
சொல்லத் துடிக்கும்!
உணர்வுகள்!
சொல்ல முடியா!
வேளைகளில்!
சொல்லியும் புரியா!
உறவுகள்!
இதுதான் நிலையென!
எவர்தான் கூறுவர்!
அவர்தம் திசையினில்!
ஆரம்பம் என்!
பயணங்கள்!
நானறியா என்னுள்ளே!
எனக்குத் தெரியாத!
எண்ணங்கள்!
எப்போது, எப்படி!
புகுந்ததென!
எப்போதும் யோசனை!
எனையறியும் வேளையில்!
என்னருகில் நீயிருந்தால்!
உனைப் புரிந்த வகையை!
உனக்காகப் பகர்ந்திடுவேன்!
அதுவரை காத்திருப்பாயா?!
அல்லாவிடில் பறந்திடுவாயா ?!
சொல்லாமல் நீயும், அதைக்!
கேட்காமல் நானும்

சத்தி சக்திதாசன்