சக்தி சக்திதாசன்!
!
உள்ளத்தைக் கேட்டுப் பார் .....!
உணர்ச்சிக் குவியலின் மேலே!
உண்மைகளின் சாம்பலின் மேலே!
தேவைகளுக்காய் - தோழா!
நாளைகளை விற்றவன் நீ!
நடந்ததை மறைத்து ஏன் தான்!
நடப்பதை திரிக்க நாளும்!
நாடகம் போட்டு உனக்கு!
நயமில்லா வியாபாரம் சொல்!
உள்ளத்தைக் கேட்டுப்பார் .....!
உயரத்தில் ஓர் நாள் பின்!
உலகின் பள்ளத்தின் மறுநாள்!
வாழ்க்கையின் நித்தியம் இதுதான்!
வேண்டாம் பொய்மையில் வாழ்வு!
நினைத்ததை வாழ்வில் இங்கே!
நடத்திய பேர்தான் எங்கே ?!
இன்பமும் துன்பமும் பங்கே!
இல்லை சூர்யோதயம் மேற்கே!
உள்ளத்தைக் கேட்டுப்பார்.....!
வாழ்ந்தவர் பலரும் சொன்னார்!
வந்ததை நமக்காய் பண்ணால்!
கேட்டதைத் தவிர்த்துப் பலரும்!
சேர்த்ததை பதுக்கி வாழ்வர்!
எதையும் தாங்கும் இதயம் தம்பி!
என்று அடையும் வேளை!
அன்று உனது வாழ்க்கை!
அழகாய் மலரும் உணர்வாய்
சத்தி சக்திதாசன்