சத்தி சக்திதாசன் !
!
அது ஒடுவதால் !
மனிதர் ஓடுகிறார் !
அது நின்றுவிட்டால் !
உலகம் ஸ்தம்பித்துவிடும் !
கடிகாரத்தைச் சுற்றிக் காற்றாய் !
கலைந்தோடும் மனிதனைப் பார்த்து !
கருத்தான புன்சிரிப்பைக் !
கக்குதே அந்தக் !
கடிகாரம் !
பளபளக்கும் காரில் பெருமையுடன் !
பவனி வரும் வியாபாரி !
பணம் குவிப்பான் மணிக்கணக்கில் !
பாவம் புரியாமல் கையில் !
பகட்டாய் அணிந்திருக்கும் கடியாரம் !
தங்கத்திலான ஒன்று அடுத்து !
தகரத்திலான ஒன்று !
தவறாமல் புரிந்திடுவீர் !
தாமதம் இன்றி அவைகாட்டும் மணி !
தரணியிலே ஒன்றன்றோ ! !
மணி பார்த்து தன் பசிபோக்கும் மனிதன் !
மறந்தானே தனக்கும் ஓர் மணிதான் !
மற்றவர்க்கும் ஓர் மணிதானென்று !
உலகைப் பார்த்துச் சிரிக்கும் !
உயர்ந்த கடிகாரம் !
உண்மையை ஏன் இவர் !
உணர்ந்து கொள்ள மறுக்கின்றார் ? !
உருள என் முள்ளு மறந்து விட்டால் !
உண்ண உணவேது இவர்களுக்கு ! !
ஆயிரம் பேதம் கொள்வர் அவரே !
அடுத்தவரை மறந்திடுவார் !
அன்பெனப் பிதற்றிக் கொள்வர் !
அறிவையே இழந்திடுவார் !
பெரிய முள்ளை பார்த்து !
சிறிய முள்ளுக் கூறியது !
நீயும் நின்றுவிடு நானும் !
நிறுத்தி விடுகிறேன் !
உள்ளத்தை இழந்த உலகம் இனி !
எம்மைத் தேடி ஏங்கட்டும் !
உண்மையாய் தம்மை அறிந்தபின் !
உலகம் இனி இயங்கட்டும் !
ஆண்டவன் சிரித்தான் ! !
கடிகாரத்தின்னுள்ளே ஒரு !
காலத்தால் மாறாத தத்துவம் !
பெரியதும் சிறியதும் ஓன்றாக !
உழைத்தால் தான் உலகம் விடியும் !
கைகளில் இதைக் கட்டிக்கொண்டே !
கருத்தழிந்த இவர் தமக்கு !
கடிகாரம் தனும் உண்மைதனை !
உணர்த்தட்டும். !
உலகம் உன்னைப் பார்க்கும்
சத்தி சக்திதாசன்