கனவுகள் ஆதரிக்க!
கவலைகள் கண்விழிக்க!
இரவினில் விழித்திருந்தேன்!
தனிமையில் அமர்ந்திருந்தேன்!
கடும்புயல் கடந்து வந்தும்!
நெடும் பாதை தெரிகிறது!
உறவுகள் பிரிந்ததனால்!
தனிமையே கொல்கிறது!
கனவுகள் பிறந்தாலும்!
கவலையில் கரைகிறது!
கரையிலே நடந்தாலும்!
பெருங்கடலே தெரிகிறது!
வடுக்களை பார்க்கவில்லை!
தீப்புண்ணும் ஆறவில்லை!
இரவுகள் தூக்கமில்லை!
இனி ஒரு உறவும் இல்லை!
பொன்னில் மனதை வைத்து!
பொய் சொல்லக் கற்றுக் கொண்டேன்!
மண்ணில் மனதை வைத்து!
மட்கிடும் நிலையைக் கொண்டேன்!
என்னில் உள்ளதெல்லாம்!
பொய்யும் புரட்டும் ஆக!
கண்ணில் நீர் வழிந்தும்!
கவனிக்க ஆளில்லை!
சொல்லில் உள்ளதெல்லாம் சூட்சமம் என்றுசொல்லி!
சொல்லிய மனிதரெல்லாம் சூனியர் என்றே எண்ணி!
அண்டை அயலவரும் ஆரிய உறவினரும்!
வேண்டாம் என்றே சொல்லி!
விருட்டென்று புறப்பட்டும்!
கவலைக்குள் கரைவதனால்!
கவனிக்க ஆள்வேண்டி!
கனவுகளில் தேடுகிறேன்!
விட்டு வந்த சொந்தங்களை!
சின்னு (சிவப்பிரகாசம்)