அகிலத்தின் படைப்பில்!
அவனொரு வினோதம்!
அலைந்தாடும் அவன்!
கலைந்தோடும் நெஞ்சம்!
கொஞ்சம் இன்பம் ! கொஞ்சம் துன்பம் !!
நிகழ்வுகளின் நிழலில்!
நின்றாடும் வாழ்க்கை!
நித்தியத்து வாழ்வினிலே!
நச்சரிக்கும் நிஜங்கள்!
கொஞ்சம் இன்பம் ! கொஞ்சம் துன்பம் !!
நடந்தவைகளின் எச்சங்கள்!
கடந்தவைகளின் மிச்சங்கள்!
நடப்பவைகளின் இனிமைகள்!
கடப்பவைகளின் மென்மைகள்!
கொஞ்சம் இன்பம் ! கொஞ்சம் துன்பம் !!
சிந்தனைகளில் சிதறுபவை!
சிதறியவைகளில் தித்திப்பவை!
சிக்கலின் முடிச்சுக்கள்!
சிக்காத முடிவுரைகள்!
கொஞ்சம் இன்பம் ! கொஞ்சம் துன்பம் !!
அவன் இருப்பும் வாழ்க்கையே!
அதன் நிகழ்வும் நடப்புக்களே!
அறிந்தோர்கள் அடைந்தோர்கள்!
அறியாதர் இழந்தோர்கள்!
கொஞ்சம் இன்பம் ! கொஞ்சம் துன்பம் !!
-சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்