எங்கே தொடங்கும் ? ... எங்கே முடியும் ? - சத்தி சக்திதாசன்

Photo by FLY:D on Unsplash

உள்ளத்தின் தவிப்புகள் !
உணர்ச்சித் துடிப்புகள் !
உண்மையின் விழிப்புகள் !
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? !
கண்களில் நீர்த்துளி !
பாசத்தின் தேன்துளி !
பருவத்தின் காதல்துளி !
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? !
மூடாத விழிகளின் இரவுகள் !
தேடாத சொந்தத்தின் உறவுகள் !
பாடாத ராகத்தின் கீதங்கள் !
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? !
வேண்டாத வேலைக்குக் கூலி !
தாண்டாத எல்லைக்கு வேலி !
தீண்டாத நீருள்ள ஏரி !
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? !
எங்கோ தொடங்கி !
எங்கோ முடியும் !
ஏதோ நிகழ்வுகளுக்காக !
ஏனிந்த ஏக்கம் !
எனக்கின்று பகர்வீரோ?
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.