எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை - வெண்ணிலா

Photo by Paweł Czerwiński on Unsplash

சாப்பிடும் சோறு !
பேசும் பேச்சு !
சிரிக்கும் சிரிப்பு !
எல்லாம் குழந்தைக்காக என !
கரு சுமந்து.. !
நாளை !
உன்னோட வண்டியில் !
முன்நின்று சிரித்து வர !
உன் இனிசியல் போட்டுக்கொள்ள !
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன் !
நான்கைந்து மணிநேரம் !
ரத்த வெள்ளத்தில் மிதந்து !
கேட்டால் கிடைக்குந்தான் !
உன் முத்தம் !
உன் அரவணைப்பு !
உன் ஆறதல் !
பச்சப்புள்ள கேட்டா !
பாலூட்டுகிறோம் !
கரு சுமந்து !
குழந்தைத் தவமிருக்கும் பெண்களை !
சுமக்க !
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை
வெண்ணிலா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.