பாலபாரதியின் காதல் கவிதைகள் - பாலபாரதி

Photo by the blowup on Unsplash

விரல் பிடித்து !
நுகர்ந்து பார்க்கிறாய் !
சிகரெட்டின் வாசத்தை !
நீயிட்ட கட்டளையை !
மீறி விட்டதற்காய் !
போபம் கொள்கிறாய் !
மௌனத்தை விழுங்கியவனாய் !
வேண்டி நிற்கிறேன் !
நாற்றமடிக்காத சிகரெட்டுக்கும் !
வாசம் நுகராத நாசிக்குமாய் !
-------------- !
!
என்னை அழி !
அல்லது !
புறந்தள்ளி கழி !
மகிழ்ச்சி தானெனக்கு !
அழிக்க முயன்றால் !
மூளையில் இருக்கிறேனென உணர் !
கழிக்க முயன்றால் !
இதயத்திலிருக்கிறேனென உணர் !
எப்படியான போதும் !
இருக்கிறேன் நான். !
-------------------------- !
இதழால் இதழ் பற்றி !
வாழ்வியல் சுகத்தினை !
நீ !
கற்றுக்கொடுப்பாயெனில் !
உடனடியாய் !
இறக்கவும் சம்மதமே !
------------------------- !
உனக்கென்ன !
பிடிக்குமென !
அடிக்கடி கேட்கிறாய் !
நீ !
என்பதைத் தவிர !
வேறு என்னவாய் !
இருந்துவிடப்போகிறது !
என் பதில் !
----------------------- !
சாமி தேர் !
எங்கள் வீதிக்குக்கூட !
வந்ததில்லையென்றேன் !
மறுநாளே !
என் வீட்டுக்குள் !
வந்தாய் நீ !
----------------------- !
ஒரு முழம் !
பூ கூட வாங்கிக் !
கொடுத்ததில்லையென !
சண்டை பிடிக்கிறாய் !
பூந்தோட்டத்தை !
ஒரு முழத்திலெப்படி !
ஈடு செய்ய முடியும் !
--- பாலபாரதி
பாலபாரதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.