சக்தி சக்திதாசன் !
அதோ அந்த வானமெனும் வீதியிலே !
நிலவெனும் தேரேறி !
வலம் வருவோமென்று சொல்ல வந்தாயா ? !
முத்துக்களை அள்ளி எடுத்து !
ஒன்றாகக் கைகளில் சேர்த்து !
தரையினில் சிந்தும்போது !
எழும் ஒலியைப் போல நீ சிரிக்கும் !
சிங்கார ஒலியின் இனிமையில் !
எனை மறக்கச் சொல்ல நினைத்தாயா ? !
தென்றல் என்னுடலைத் தீண்டும் போது !
சிலிர்த்திடும் மென்மையான உணர்வுகளில் !
உன் உள்ளம் கலந்திருக்கிறது !
என்றே சொல்ல வந்தாயா ? !
சின்னக்குழந்தை பேசும் மழலையில் !
தவழும் தமிழின் இனிமையின் வருடல் போன்று !
வெண்கலக்குரலில் நீ இசைக்கும் !
தமிழிசையை ரசித்திடச் !
சொல்ல நினைத்தாயா ? !
பாலுடன் கலந்த வெண்மையை !
பிரிக்க முடியாததைப் போல் !
உன்னுடன் கலந்த என்னிதயத்தை !
பிரித்தெடுக்க முடியாது என்றேதான் !
சொல்ல வந்தாயோ ? !
சொல்ல வந்ததைச் !
சொல்லி முடிக்கமுன் அந்தக் !
காலத்தேவனுக்கென்னடி அவசரம் !
உன்னைக் காற்றோடு !
கொண்டு செல்வதற்கு
சத்தி சக்திதாசன்