காக்கைகள் - அன்பாதவன்

Photo by Tengyart on Unsplash

கண்ணாடிக் கதவுகள் திறந்து!
கவளம் வைக்கிறேன்!
ஓரக்கண்ணால் பார்ப்பவைகளின்!
கண்களில் மின்னுகிறது-கண்ணி பயம்!
ஒருக் கொத்தோடு பறந்து !
தூரப் போய்விடுகின்றன..!
இருக்கலாம்-நஞ்சு குறித்த சந்தேகங்களும்!
கதவுகளை சாத்துகிறேன் இறுக்கமாய்,!
அறைக்குள் வந்துவிடக்கூடும்!
காகங்கள் என..!
பரஸ்பர நம்பிக்கையின்றிப் பழகுகிறோம்!
நானும்!
மாநகரக் காக்கைகளும்.*
அன்பாதவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.