ஒரு வினாடி - சத்தி சக்திதாசன்

Photo by Sonika Agarwal on Unsplash

உள்ளத்தின் !
உணர்ச்சிகளில் ஓவியமாய் !
உறைந்தது !
ஒரு வினாடி !
கண்களின் மணிகளில் !
காவியமாய்ப் !
புதைந்தது !
ஒரு வினாடி !
காதுகளின் !
சுவர்களில் !
கானமாய் ஒலித்தது !
ஒரு வினாடி !
தென்றலின் குளிர்மை !
உடலோடு உறவாடி !
தீண்டும் சுகம் !
ஒரு வினாடி !
பார்வைகள் மோதி !
காதலாய்த் தெறித்து !
மோகமாய் வளர்வது !
ஒரு வினாடி !
ஒவ்வொரு வினாடியாய் !
கிடைத்த கிளர்ச்சிகளின் !
மொத்த உருவமாய் !
தொலைவிலே நீ
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.