சாவதற்கு அவர்கள்!
தயாராகவே இருக்கிறார்கள்!
வன்புணர்சிக்கு உட்படுத்தி!
கொட்டடிக்குள் அடைபடுவதிலிருந்து!
கொத்து கொத்தாய் வீழும் குண்டால்!
குறையும் மனிதத்தை எதிர்த்து!
சகோதர நாடு தரும்!
சாக்கடை முகாம் கடந்து!
சாவதற்கு அவர்கள்!
தயாராகவே இருக்கிறார்கள்!
தொல்லை தரும் வெள்ளை வேன்!
வெள்ளை உடை மனிதர்கள்!
தொடரும் சோதனைச் சாவடி!
இல்லா தேசம் வேண்டி!
சாவதற்கு அவர்கள்!
தயாராகவே இருக்கிறார்கள்!
உண்ணா நோன்பிருந்து!
தினம் ஒருவராய் தீக்குளித்து!
போராளி உடை தரித்து!
மூப்பை கண்டடைந்த பின்!
சாவதற்கு அவர்கள்!
தயாராகவே இருக்கிறார்கள்
பாண்டித்துரை