நிலவில் களங்கமாமே !!
நேற்றொருவன் என் காதோடு!
சொன்ன கதை கேட்டுக் கொஞ்சம்!
சோபை இழந்தேன்.!
கவிதை பாடும் மனிதனல்லவா நான் ?!
கருத்துக்கே ஒளி கொடுக்கும் என்!
நிலவுக்கே களங்கம் என்றால்!
நிம்மதி அடையுமா என் நெஞ்சம் ?!
கைவிரல்கள் அசைய மறுத்ததால்!
கவிதைச் சுனை ஊற மறுத்ததால்!
கண்களை மூடிக் கொஞ்சம் தூக்கத்தோடு!
போராடிக் கொண்டிருந்தேன்!
சயனத்தின் சங்கீதம் இசைத்ததால்!
சத்தமின்றி என்னை!
நித்திரை அணைத்துக் கொண்டது!
கனவிலொரு ஒளியாக காற்றிலேறி!
கண்முன்னே புன்னகைத்தாள் என் தாய் !!
தமிழ்த்தாய் ......!
நித்தமும் கவிபாடி களித்திருந்தாய்!
நித்திரையில் கூட உன் கைகள்!
மனத்திரையில் வரைவது கவிதை வரிகள் தானே ...!
ஏன் மைந்தா உனக்குக் கலக்கம் ?!
எவர் சொன்னார் உனக்கு எதனை ?!
தாய்மைக்கே உரித்தான கனிவோடு!
தலை நிமிர்த்தி எனை நிறுத்தி!
தாங்கிக் கொண்டாள்.....!
புரிந்து கொண்டேன் மகனே!
காய்ந்து போன உன் கவிதைச்சுனையின்!
காரணத்தை நானும்!
நிலவில் களங்கள் என்று சொன்னவன்!
நீரிலே எழுத்துப் போன்றவன்!
மகனே !!
கவிஞன் ....!
காற்றுப் புக முடியா இடையினுள்!
கண்மூடித்திறப்பதற்குள்!
களவாகச் சென்று வருபவன்!
சூரிய ஒளி பட முடியாத இடத்தின் மீது!
குளிர்மையாகப் படர்ந்து!
குறுங்கவிதை படிப்பவன்!
பைத்தியக்காரன் அவன்!
பத்தும் சொல்வான்!
பற்றியெறியும் நெருப்பின் மேல்!
படர்ந்திருக்கும் பனி போல!
நியாயமற்ற இந்தச் சமூகத்தில்!
நாளைய நடப்புக்களைச் சொல்வோர்!
நேற்றைய தவறுகளை அறிவோர்!
எனதருமைக் கவிஞர்களே ....!
தளராதே...!
தனயா... கண்விழித்து எழுந்ததும்!
கருத்து மேகத்தைக் குவித்து!
கவிதை மழையெனப் பொழிந்து விடு!
குளிர்காலத் தென்றலென!
நிலவுதனை உனது கவிதை தழுவட்டும்!
அப்போது....!
நிலவு உன்னைப் பார்த்துப் புன்னகைக்கும்!
நிலவில் களங்கமுண்டா ? எனக் கண்டு கொள்வாய்...!
நெஞ்சம் நிறைவாக!
அன்னை பாதம் பணிந்து!
அடுத்தநாள் காலை தனை!
ஆவலாய்ப் பார்த்திருந்தேன்!
!
-சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்