தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பம்பரம்... முகவரி

படைவீடு அமுல்ராஜ்
பம்பரம்...முகவரி !
01.!
பம்பரம்...!
-----------------!
கென்னிப்பன் வூட்டு !
ஐயப்பன மிஞ்சரதுக்கு !
ஒருத்தனும் இருந்ததில்ல ஊருல ...!
அவங் செதுக்கித்தர !
பொம்பரத்துக்கு!
ஒரு கூட்டம் !
எப்பயும் அவங்கூட சுத்தும் ...!
பொம்பரத்துக்கினே !
காட்டுக்குப் போவாங்க ...!
பொர்சிமரம்தான்!
பொம்பரத்துக்கு எத்ததுன்னுவாங்க ...!
சிலநேரத்துல !
அவுஞ்ச,!
கொடுகாலி,!
துரிஞ்ச மரங்கள தேடுவாங்க ...!
பொம்பரம் செதிக்கித்தரகேட்டா !
ஆணி உனதா, என்தான்னு கேப்பாங்க !
ஆணிய நாங்குத்தா ஒன்னார்ருவான்னுவாங்க !
ஆணிய அவனே அடிச்சி செதுக்கித்தந்தா !
ரெண்ருவான்னுவாங்க ...!
தெருமுழுக்க !
அவங் செதுக்கன பொம்பரந்தாங்க வெளையாடும் ..!
அவங் வெச்சிருந்த !
சட்டித்தல பொம்பரத்த !
ஒருத்தனும் ஒடச்சதில்ல தெருவுல !
தரையில வுடாமலே!
கையில ஏந்தி அழகுகாட்டுவாங்க ...!
இப்பயெல்லா!
ஒரு பொம்பரத்தையும் தெருவுல பாக்கமுடியல !
ஐயப்பங் மட்டும் !
காட்டுக்கு போறத நிறுத்தல...!
இன்னமும் !
அவங் கொடுவா சத்தம் !
அந்த காட்டுமரங்கள்ள!
கேட்டபடிதாங் கெடக்குது ...!
ராவெல்லாம் !
எரியும் சாராய அடுப்புக்கு !
அவங் வெட்டியார்ர வெருவுதாங்க!
நின்னு எரியுதாம் !
!
02.!
முகவரி !
------------!
கை வலிக்க !
கொஞ்ச தூரத்திற்கொருதரம் !
கைப்பை சுமையை !
இறக்கி கொண்டுவரும் !
முகமறியா !
சகோதரியிடத்து !
''கொடுங்கக்கா நாங் தூக்கியார்றங்''!
எனச் சொல்லியபோது !
அவள் பார்வையில் தெரிந்தது !
திருடன் என !
என் முகம்

பாட்டிகள் மாறிவிட்டார்கள்

s.உமா
அந்தக் காலம்!
அங்கலாய்க்கிறாள் பாட்டி!
எதிரில் நின்றிருப்போமா !
எதிர்த்து பேசியிருப்போமா?!
சொன்னதை செய்து!
கொடுத்ததை சாப்பிட்டோம்.... !
ஆம்!
அது அந்தக் காலம்!
நடுங்கும் விரல்களால்!
அழுந்த எண்ணெய்த்தடவி!
பின்னிவிடும் வேளையில்!
பலப்பல கதைகள் சொல்லி!
சுரம் காண்ட நேரத்தில்!
மிளகு ரசம் சுட்ட அப்பளம்!
பண்டிகை காலத்தில்!
சீடை கைமுருக்கு!
அதிரசம் போளி!
அத்தனையும் செய்து கொடுத்து !
சட்டி சோற்றையும்!
கட்டித் தயிர்விட்டு பிசைந்து!
கைகளில் குழித்து விட்டு !
வத்தல் குழம்புபோடு!
வகையாய் உண்ணவைத்து!
வெண்டைக்காய் கத்தரிக்காய் !
பாவக்காய் ஆனாலும்!
பக்குவமாய் சமையல் செய்து!
பாசமாக பரிமாறி !
விளையாட்டாய் வேலைவாங்கி!
வேடிக்கையாய் சொல்லிக்கொடுத்தது !
எல்லாம் அந்தக்காலம்!
'லேஸ்' சிப்ஸ் வாங்கி தந்து !
குழந்தைகளின் வாயடைத்து!
'பந்தம்' 'பாசம்''நிம்மதி'!
பார்க்கும் பாட்டிகள்!
சொன்னால்!
எந்த வேலையும் செய்வதில்லை!
இந்தக்காலக் குழந்தைகள்.....!
S.உமா

பிளிறல்

க. ஆனந்த்
துக்கமோ!
மகிழ்ச்சியோ!
தும்பிக்கை உயர்த்தி!
பிளிறும். !
துணைக்கான!
அழைப்பாகவோ !
ஆபத்திற்கான!
சமிக்ஞையாகவோ !
சுதந்திரத்தின்!
பிரகடனமாகவோ !
எத்தனையோ இருக்கலாம்!
பிளிறலுக்கான காரணங்கள். !
பாகனை சுமந்து!
நகர் வலம் வரும்!
யானைக்கு மட்டும்!
கிடைப்பதில்லை!
ஒரு காரணமும்!
பிளிறுவதற்கு

சுதந்திரம்

றஞ்சினி
?!
----------------!
இருண்டு கிடக்கும்!
குகைக்குள்!
குருதியும்!
ஓலமும்..!
இறந்து கிடக்கும்!
உடல்களுக்கும்!
உரிமைகூற!
எவரும் இல்லை!
வீதிகளிலும் வீடுகளிலும்!
மரங்களை அழித்து!
மனங்களை அழித்து!
நடப்பட்டுள்ளார்கள்!
மனிதர்கள்!
ஆயுதங்களுடன்..!
திறந்தவெளிச் சிறைகளுக்குள்!
பயத்தின் நிழல்!
மனிதர்களைத்தின்ன!
காணாமல்போபவர்களை!
யார் தேடுவது!
போருடன் தூங்கி!
போரில் விழித்து!
போரை சுவாசித்து!
இறந்த உடல்களில்!
தடுக்கிவிழுந்து!
சாதாரண வாழ்வே!
மறந்து!
புதைகுழிக் கலாச்சாரத்தில்!
மிதக்கும் எமது!
தேசத்தில்..!
சுதந்திரம் என்றோ!
தற்கொலை செய்துவிட்டது!
!
- றஞ்சினி

துளிகளைத் திரட்டி துயரைதுடைப்போம்

கண்ணப்பு நடராஜ்
வான் அமுதை ஏந்து !
வளமான நதியாக்கு !
வட்டமிடும் ஆறு !
வளத்தின் வாயாகும் !
புகழ் காலாகும்,!
எம் பூமியை !
நாம் ஏந்திய எம் நீரோடும்!
பாலையிலே கால்வாய் !
அது ஆகட்டும், !
அந்தப் பூமி !
மடி நனைக்கும் நிலதுளை நீரோ !
வெள்ளிக்காசைக் காட்டும்!
வாய்க்கால்கள் ஆகும் , !
வரப்புயர நெல்லு உயரும் !
சொல்லிய மூதாட்டி !
எம்மவர் அறியாயோ.. !
வா வரப்புக்கள் செய்வோம் !
நிலம் சூழ் வரப்புக்கள் செய்வோம் !
வா எம் தமிழ் நிலப் பரப்பை !
கடல் கொள்ளா வரப்புக்கள் கட்டுவோம்.. !
வான் துளி நீரெல்லாம் !
தாழ்வாரச் சொட்டுக்களெல்லாம் !
மேட்டில் கொட்டும் !
காட்டு மழையினை !
கும்பிடு கையைக் குவித்து !
வானை நோக்கி ஏந்தி !
அதில் வற்றாத !
நதி செய்வோம் வா,!
வான் சிறப்புச் சொன்ன !
வள்ளுவன் நல்ல தமிழன்..,!
வா வரப்புக்கள் கட்டி !
செல்வம் சேர்ப்போம்.. !
நம் தாயும் !
இனி வரும் தமிழ் குழந்தைகளும் !
தமிழ் நாடும் !
அயல் குழந்தைகளும் !
வான் முலையில் வற்றாமல் குடிக்க .., !
கொள்ளை நீர் !
கடலில் கலந்தாலும் க!
டனாய் அளவாய்க் !
கண்ணீர் கலவாய் !
எவன் தருவான் நீரை!
வேண்டாம் பிச்சைப் பாத்திரம் !
எம் நிலம் !
நீரை வடித்து வைக்கும் !
பெரும் பாத்திரம் இருக்கையில் .. !
அதோ !
சூழ் அந்தக் பெரும்பரப்புக் கடலின் ஆவியையும் !
திரட்டிகுளிராக்கு, அ!
தை எம் நிலம் நோக்கித் திருப்பிப் பயிராக்கு.. !
தமிழா நீ தலை நிமிர்த்து !
வெள்ளம் வந்தால் !
பெருக்கென்று சொல்லு !
அது செல்வப் பெருக்கென்று சொல்லு.. !
நிலமெங்கும் ஓட்டை செய் !
கங்கையை எம் மண் காவட்டும் !
அந்தப் புனித நீரை நிறைத்திடு !
நிலக்கீழ் நீரென்ற !
புதையலை நம் வாரிசுகள் எடுக்க.. !
இனி இல்லை !
இல்லாப் பயிர் செய்ய வா, !
நீர் உண்டு!
நில மடியில் வற்றா ஆறுண்டு..!
மேடாக்கி அணை செய்து !
கடலைக் கோளைக் கட்டுப்படுத்து, !
தோண்டிக் கண்ட பள்ளத்தில் ஆற்றை ஆக்கு, !
ஓடி வரும் நீரமுதை !
குளமெல்லாம் தேக்கும், !
குலமெல்லாம் ஒன்றாகும், !
ஆறெல்லாம் நீர் சுமந்து குளம் குட்டை நிரப்பும்,!
வான் ஓட்டை போடும் !
விண்கோள் ஏவி விளையாடியது போதும், !
மண்துளைத்து !
மழை நீர் செல்ல வழி சொல்லு போதும், !
கையுண்டு !
கன மனிதர் தான் உண்டு,!
நீர் துளை நீ போடு.. !
காற்று நீரைக் கைப்பற்ற !
காட்டு வேலி எல்லையெங்கும் போடு.. !
உணவு உண்டு !
நீரமுது உண்டு எம் கையில், !
கோடையிலே மண் அகழ வா!
பெரும் வாய்க்கால் செய்வோம் வா.. !
ஒரு நாளை ஒதுக்கி!
ஒரு கடகம் மண் எடுத்தால்!
மாரி மழை வற்றாத நீரூற்றை மண் மடி சுரக்க வைக்கும், !
வா மலட்டு மண்ணை !
வேர் பற்றி செழிக்கசெய்வோம்.. !
கரை தாண்டி !
கடல் கலக்கும் நீரை !
நிலத்துள்ளே சிறைபடுத்தி !
வெள்ளப் பெருக்கை !
செல்வப் பெருக்காய் செய்வோம்.. !
எம் நாட்டு செல்வம் !
கடலில் கரைவதோ !
மாரியிலே வெள்ளமென்று புலம்புவதோ!
கடலோரம் !
பெரும் மேடை அணை செய்வோம் !
பெரும் ஊழி அலைக்கை உடைப்போம் !
அதிலே பாதையும் !
பெரும் சாலை சூழ் சோலையும் சமைப்போம் .. !
ஓடக் கூடுமா வெள்ளம்!
நம் நிலச்சாற்றைக் கரைத்து!
மாரியிலே வெள்ளம் !
கடித்துப் பயிர் செத்த கதை சொல்லி !
கோடையிலே நீர் மறுத்து !
பயிரழிந்த புராணம் பாடி...!
நாட வேண்டுமோ !
அவன் நீரைக் கேட்டு.. !
அயல் அவர் !
எம் தமிழர் பூமிக்கு !
கையேந்தி வரட்டும் !
அந்த அயல் நாட்டுப் பறவைகள் !
பசியாறப் பருவப் பெயர்ச்சியில்!
பஞ்சத்தில் படை எடுத்தால் !
அள்ளிக் கொடுப்போம் !
அணைத்து நீரும் வாழ !
வேரோட நிலமும் கொடுப்போம்,!
முல்லைக்கு!
தான் ஓடும் தேர் கொடுத்தான் தமிழன்!
வாழும் மனிதருக்கு !
வறளும் பயிருக்கு !
நீரினை மறுப்பானோ.. !
மற்றவன் அழக் கண்டால் !
பெரும் மனதில்!
நீர் அள்ள மறுப்பானோ....!
வள்ளல் வராலாறு வைத்து !
வாழ்வு கொடுப்பவன் தமிழன்,!
நீ எடு ஒன்றாய் !
மண்ணை நீரேந்தி !
வெள்ளம் திசை திருப்பும் !
வளம் திருத்தும் !
ஏர் ஆயுதம், !
வா ஒன்றாய் மாரி வர முன்னாய் .. !
மண் வாரி கடல் கொள்ள முன்னர், !
பெரும் பணி இதுவே !
நம் மண்ணை !
நாம் காக்கும் நற்பணி !
ஒன்றாய் இணைவோம் !
கங்கையை மதி கொண்டு !
நம் கையால் கடைவோம் !
துளிகளைத் திரட்டி துயரை துடைப்போம்

கைவினை

மு. பழனியப்பன்
மு. பழனியப்பன் !
குடைகளின் திருவிழா !
நூலாலும் தாளாலும் !
பற்பல வண்ணங்களில் !
வாழை மட்டையில் !
செருகி வலம் வரும் தெருவிழா !
கடைகளில் எல்லாம் !
நிச்சயம் இடம் பிடிக்கும் !
5 ரூபாய், 10 ரூபாய் !
கூவி விற்கும் சிறுவர்கள் !
பிள்ளையார் பின்னால் வைத்தபின் !
அலங்காரம் நிறைவெய்தும் !
வீதிக்கு வீதி !
கைவினைக் கலைஞர்கள் !
எவர் பதிய வைக்கப்போகிறார் !
இவர்களின் கலையாற்றலை

என் தேசத்தை காணவில்லை

கவிதா சேகரன்
ஏ உலக மக்களே !!!!
இங்கு என் தேசத்தை காணவில்லை!
யாரேனும் கண்டீர்களா?!
இந்தியா என்றொரு புண்ணிய பூமி இருந்தது!
யாரேனும் கண்டீர்களா?!
என் தேசத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எனும் !
உயர்ந்த ஒழுக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்!
யாரேனும் கண்டீர்களா?!
கூட்டுக் குடும்பமாய் குருவி கூடுகளைப்!
போல வாழ்ந்து வரும் !
என் தேச மக்களை எங்கேனும் கண்டீர்களா?!
என் தேசத்தில் ஒரு மாநில மக்களுக்கு துன்பம் !
என்றால் இன்னொரு மாநிலத்தவர் !
உயிரையும் கொடுப்பார்களே !
கண்டீர்களா என் தேச மக்களை?!
பல நாட்டு மக்களும் என் நாட்டு!
கலாச்சாரத்தை பார்த்து!
வியந்து கொண்டு இருப்பார்களே!
கண்டீர்களா அவர்களை?!
என் கொள்ளு பாட்டன் காந்தியும்!
என் மாமா நேருவும் வாழ்ந்த !
என் புண்ணிய தேசத்தை கண்டீர்களா?!
என் பாட்டன் மார்கள் ரத்தம் சிந்தி!
சுதந்திரம் வாங்கிய என் !
புண்ணிய பூமியை கண்டீர்களா?!
என் தாய் மார்கள் என் தாய் மக்களுக்கு!
வீரப் பால் ஊட்டி வளர்த்தார்களே !
அப்படிப் பட்ட என் வீர பூமியை கண்டீர்களா?!
சகோதர பாசத்தில் சாணக்கியனை!
தோற்கடிக்கும் என் தேச சிங்கங்களை!
பார்த்தீர்களா?!
ஏ மூடனே!!!!
அதோ உன் தேசம்!!!
காமத்திற்காக பெற்ற மகளின் கற்பை !
சூறையாடும் காமுகர்கள் நிறைந்த !
உன் புண்ணிய தேசத்தை பார்!!!!
தண்ணீருக்காக உன் மாநில மக்கள்!
அடித்துக் கொள்ளும் அவலத்தை பார்!!!!
கள்ளக் காதலுக்காக கட்டிய கணவனை !
கொலை செய்யும் பெண்கள் நிறைந்த !
உன் தேசத்தை பார்!!!!
அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படும்!
உன் குல வீர புருஷர்களைப் பார்!!!!
தீவிரவாதம் என்ற பெயரில் !
உன் தேசத்தை கூறு போடும்!
உன் அன்னை பூமியை பார்!!!!
அமைதிப் பூங்காவான உன் தேசம்!
இப்பொழுது அமைதி இழந்து!
தவிக்கும் அவலத்தைப் பார்!!!!
பெற்ற தாய் தந்தையர்களை அனாதையாக!
தவிக்க விடும் உன் தேச புருஷர்களை பார்!!!!
வீதிக்கொரு கொலையும் ஜாதிக்கொரு கொலையும்!
நடக்கும் உன் இந்திய தேசத்தை பார்!!!!
அடுப்புடன் சேர்ந்து மனித உயிர்களும்!
எரிந்து கொண்டிருக்கும் கொடுமையைப் பார்!!!!
உன் அன்னை பூமியின் நெஞ்சிற்கு!
தினம் ரத்தத்தை அருவியாக்கும்!
உன் சொர்க்க பூமியை பார்!!!!
அரசியல் என்ற பெயரில் உன் தேசத்தை !
சுரண்டும் அரசியல்வாதிகளைப் பார்!!!!
காமத்திற்காக உன் நாட்டு பெண்கள் !
சீரழிக்கப் படும் அவலத்தைப் பார்!!!!
ஐயோ!!! ஐயோ!!! ஐயோ!!!!
இதுவா ஏன் தேசம்!!?!!!
கண்ணீரையும் ரத்தத்தையும் சிந்தி!
சுதந்திரம் வாங்கிய இதுவா ஏன் தேசம்!?!!
என் அன்னை பூமியா இப்படி!
களங்கப் பட்டு நிற்ப்பது!!?!!!
என் வீர இளைஞர்கள் பகத்சிங்கும்,!
நேதாஜியும், விவேகனந்தனும்!
வாழ்ந்த என் அன்னை பூமியா இது!!?!!!
ஏ பைத்தியமே !!
இன்று வந்து உன் தேசத்தைத் !
தேடும் நீ யார்?!
என் தேசத்தின் மூசுக் காற்றை சுவாசிக்க !
வந்த ஓர் இந்தியக் குழந்தை.!
ஏ தோழனே!!
இன்று என் தேசத்தை கடந்து!
செல்லும் நீ யார்?!
ஆ.. நானா?!
என் முனோர்கள் சொன்னார்கள் !
உன் தேசத்தைப் பற்றி.!
ஒரு ஜென்மம் இங்கு வாழ்ந்து விட்டு !
செல்ல வந்தேன்.!
ஆனால் இங்கு உன் தேசத் தாய்!
கேட்பாரற்று சிதைந்து கொண்டு !
இருக்கிறாள்.!
ஆகவே மீண்டும் என் தேசம் போகிறேன்!
மறு ஜென்மம் எடுக்க!!!!
ஏ இந்திய பதர்களே!!
கேட்டீர்களா!?!கேட்டீர்களா!?!கேட்டீர்களா!!!
என் தேசத்தின் அவல நிலையைப்!
பற்றி கேட்டீர்களா?!
வாழ்க்கையை செம்மைப் படுத்த!
வள்ளுவன் எழுதிய திருக்குறளை படித்த!
என் தேசத்தின் அவலத்தைப் பார்த்தீரா?!
ஓ பாரதத் தாயே!!!!
எங்ஙனம் தாங்குகிறாய்? எப்படி தாங்குகிறாய்?!
ஏ மகாத்மாவே!!
எடுத்து வா இன்னொரு ஜென்மம்.!
ஏ நேதாஜியே!!
எழுந்து வா கல்லறையை விட்டு.!
அம்மாவின் கருவில் தூங்கும்!
என் இளவல்களே!!
குதித்து வாருங்கள்...!
மீண்டும் ஒரு யுத்தம் நடத்த வேண்டும்.!
ஆம் !!! நம் அன்னை பூமியின் கண்ணீரைத் !
துடைக்க நாம் யுத்தம் நடத்த வேண்டும்.!
வைரமுத்து கேட்டதுப் போல் இந்த பூமியை!
சலவை செய்ய வேண்டும்!!!
சலவை செய்ய வேண்டும்!! சலவை செய்ய வேண்டும்!!!
வாருங்கள் இந்தியாவை தூக்கி நிறுத்த

மழை கோலம்

வி. பிச்சுமணி
வைகறையில்!
தூக்கம்!
தொலைக்க விரும்பாமல்!
சில பெண்கள்!
முன் நாள்!
இரவிலேயே!
வாசல் தெளித்து!
கோலம் போட்டு விட்டு!
தூங்க செல்வது போல்!
முன்னிரவில்!
வந்த மழை!
தூறல் போட்டு!
பூமி தொளித்து!
தார்சாலை வெப்பத்தில்!
மாறும் கோலங்களை!
போட்டு விட்டு!
கலைந்து சென்று விட்டன

மன சதுப்பு.. குடைக் கம்பிகள்

கலாசுரன்
எழுதும் கதைகள்!
01.!
மன சதுப்பு!
------------------------!
ஒரு!
யோசனைக்கான!
மனச் சதுப்பை !
அல்லது !
அந்த சதுப்பிலிருந்து !
மீளுவதற்கான !
யோசனையை !
தொடர்ந்து செல்கிறது !
ஒரு மௌனித்த !
சிந்தனை ...!
அது !
நீடிக்கும் பட்சத்தில் !
கண்முனையில் நிகழ்பவை !
யாவும் !
அந்த சதுப்பில் !
விழுந்து மறைவதை !
அறிந்தும் !
அக்கண்கள் !
அந்த !
காட்சிகளுக்கு !
முன் ஒரு !
ஊமையாகத் !
திறந்து தான் இருக்கின்றன ....!!
02.!
குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் ...!!
---------------------------------------------!
மழை தாண்டி வந்ததும்!
திண்ணையில் விரித்து!
வைக்கப்பட்டிருந்தது குடை!
தரை தொடும் அதன் ஒவ்வொரு!
கம்பிகளும் தரையில்!
விழிநீர் வழிய எழுதிக்கொண்டிருந்தது!
தன் கதைகளை .....!
யாரும் வாசிப்பதற்க்காக இல்லை எனினும்!
தன்னை சுருட்டி ஓரமாய் வைக்கையில்!
சோகங்கள் மறந்து!
தன் கனவின் மடிப்புகளுடன்!
அடுத்த மழைவரைக்கும்!
நிம்மதியாக தூங்கும்படிக்கு

வலி

தென்றல்.இரா.சம்பத்
உன் வெட்கத்தைப்பார்த்து !
வெகு நாட்களாகிவிட்டது.... !
என் வருகையை எதிர்பார்த்து !
நீயும் முகத்தைத் திருத்தம் செய்த காலம் !
வெறும் கனவாய் நினைவிலிருக்கிறது...! !
இப்போதும் நான் வருகிறேன்தான் !
நீதான் எனை எதிர்பார்ப்பதில்லை..... !
ஆனாலும் சொல்லிக்கொள்வேன்... !
கேட்பவரிடமெல்லாம்..நீதான் வரச்சொன்னாய் என்று....! !
- தென்றல்.இரா.சம்பத்.!
இரா.சம்பத்குமார்,!
ஈரோடு